ஆட்டு ரத்தம் உடம்பை இரும்பாக்குமே.. மட்டன் வாங்கினால் இதை கேளுங்க.. தெரிஞ்சுகிட்டா ஆச்சரியப்படுவீங்க
சென்னை: சென்னை மாநகரமே வியக்கும் அளவிற்கு அசைவ உணவுகளில் ஆட்டிறைச்சிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. பலரும் சுவைக்காக மட்டுமே மட்டனை விரும்பி சாப்பிடும் நிலையில், அதன் ஒவ்வொரு பாகத்திலும் ஒளிந்திருக்கும் மருத்துவ ரகசியங்கள் பலருக்குத் தெரிவதில்லை. ஆட்டிறைச்சியின் ஒவ்வொரு உறுப்பும் ஒரு குறிப்பிட்ட உடல் நலக் குறைபாட்டிற்கு மருந்தாக அமைகிறது என்பதுதான் அதன் ஸ்பெஷாலிட்டியே.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
ஆரோக்கியம் கருதி மாதம் ஒருமுறையாவது குறிப்பிட்ட அளவில் ஆட்டிறைச்சியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று டாக்டர்களும் மற்றும் உணவு நிபுணர்கள் பரிந்துரைப்பதற்குக் காரணங்கள் ஏராளம்.

ஆட்டுக்கறியின் பொதுவான பயன்களைப் பார்த்தால், இது உடலுக்கு அபரிமிதமான பலத்தைத் தருகிறது. உடல் சூட்டைத் தணித்து, சருமத்திற்கு இயற்கையான ஆரோக்கியத்தையும் பொலிவையும் வழங்குகிறது.
ஆட்டுக்கறி நன்மை தரக்கூடியதா
பார்வைக் குறைபாடுகளால் அவதிப்படுபவர்கள் ஆட்டுக்கறியைத் தொடர்ந்து உட்கொண்டு வரும்போது, பார்வைத்திறன் தெளிவடைகிறது. உடலின் உட்புற உறுப்புகளைப் போலவே, நாக்குப்பகுதி உடல் சூட்டால் அவதிப்படுபவர்களுக்குச் சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
அதேபோல, ஆட்டுக்கொழுப்பானது இடுப்புப் பகுதிக்குத் தேவையான பலத்தை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடலில் ஏற்படும் கடுமையான வலி மற்றும் புண்களை ஆற்றுவதில் இதன் பங்கு மகத்தானது. அம்மை நோய் மற்றும் அக்கி நோய் போன்ற பாதிப்புகளுக்கு ஆட்டுக்கொழுப்பு ஒரு சிறந்த இயற்கை மருந்தாகத் திகழ்கிறது.
ஆட்டு மூளை - ஆட்டு கொழுப்பு
ஆட்டு மூளையை பொறுத்தவரை, இது உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியடையச் செய்யும் குணம் கொண்டது. ஆண்களின் ஆண்மை விருத்திக்கும், தாது பலம் பெறுவதற்கும், நினைவாற்றலை மேம்படுத்துவதற்கும் ஆட்டு மூளை ஒரு சிறந்த உணவாகும்.
ஆட்டின் கால்களை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, அது எலும்புகளுக்குப் போதிய வலுவைத் தருகிறது. நெஞ்சுப் பகுதியில் தேங்கியுள்ள சளியை வெளியேற்றி, சுவாசப் பாதையைச் சீராக்குவதோடு, கால்களின் உறுதிக்கும் இது பெரும் உதவியாக இருக்கிறது.
ஆட்டு ரத்தம் - ரத்த சோகை போக்கும்
இந்த லிஸ்ட்டில் மிக முக்கியமானது ஆட்டு ரத்தம். இதில் இரும்புச் சத்து அபரிமிதமாக இருப்பதால், ரத்த சோகை பாதிப்பு உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது. ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, உடலை சுறுசுறுப்பாக்குவதுடன், புதிய ரத்த அணுக்கள் உற்பத்தியைத் தூண்டுகிறது. ஆட்டு ரத்தத்தில் சோடியம், கால்சியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், இரும்புச் சத்து, மற்றும் பாஸ்பரஸ் போன்ற உடலுக்கு இன்றியமையாத சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
வளரும் குழந்தைகளுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் இதில் ஏராளமாக உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இது சிறந்த ஊக்கச்சத்தாக அமைகிறது.
மட்டன் வாங்கும்போது இது முக்கியம்
பொதுவாக அசைவ உணவுகளைச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற அச்சம் பலருக்கும் உண்டு. ஆனால், ஆட்டு ரத்தப் பொரியல் அதற்கு மாறாக, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள B வைட்டமின் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை எரிக்கும் பணியை செய்கிறது. இதில் அதிகப்படியான புரோட்டீன் நிறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டின் ஈரல் ரத்த விருத்திக்கு மிகச் சிறந்தது.. இதில் வைட்டமின் A, Bஅதிக அளவில் உள்ளது.. இது கண்பார்வையை மேம்படுத்தவும், ரத்த சோகையைத் தடுக்கவும் உதவுகிறது.. பலவீனமாக இருப்பவர்களுக்கு ஈரல் சூப் ஒரு சிறந்த சத்துணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது..
ஆட்டிறைச்சி நன்மைகள்
அதேபோல ஆட்டின் குடல் பகுதி ஜீரண சக்தியை அதிகரிக்கவும், வயிற்றுப் புண்களை ஆற்றவும் உதவுகிறது.. பாரம்பரிய முறையில் குடல் சுத்தம் செய்யப்பட்டு வதக்கப்பட்டு உணவாக உண்ணப்படும்போது, அது வயிற்றுக்கு ஒருவிதக் குளிர்ச்சியையும் பலத்தையும் தருவதாகக் கருதப்படுகிறது..
ஆட்டுத் தலைக்கறி உடல் சூட்டைத் தணிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.. இது நரம்பு மண்டலத்தைச் சீராக்கவும், மூளைச் செயல்பாட்டைத் துரிதப்படுத்தவும் உதவும்.
மற்ற இறைச்சிகளுடன் ஒப்பிடும்போது, மாட்டிறைச்சியை விட நிறைவுற்ற கொழுப்பு (Saturated fat) இதில் மிகவும் குறைவு. எனவே, டயட்டில் இருப்பவர்கள் தயக்கமின்றி ஆட்டு ரத்தத்தைத் தேர்வு செய்யலாம்.
யார் யார் தவிர்க்கலாம்
மேலும் ஆட்டு ரத்தத்தில் காணப்படும் சி.எல்.ஏ (CLA) எனும் கொழுப்பு அமிலம், புற்றுநோய் செல்களைத் தடுப்பதற்கும், உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைப்பதற்கும் உதவுகிறது. இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்த ஆட்டுக்கறியையும், ரத்தத்தையும் முறைப்படி உட்கொள்வது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும்.. ஒரு சுவையான உணவு என்பதையும் தாண்டி, இது நம் உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு சிறந்த மருந்தாகவே செயல்படுகிறது..
ஆனாலும் சிறுநீரக பாதிப்பு, ரத்தத்தில் யூரிக் அமில அதிகரிப்பு, மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஆட்டுக்கறி மற்றும் ரத்தத்தை தவிர்ப்பது நல்லது.. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் ஒவ்வாமை அல்லது இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் இதனை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்..!!
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications