ஆடு வளர்க்க போறீங்களா? விவசாயம், கால்நடை வளர்ப்புக்கு ரூ.30 லட்சம் வரை கடன்.. கூட்டுறவு துறை அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொந்தமாக விவசாயம் செய்யவும், கால்நடைகள் வளர்க்கவும், குளிர்பதனக் கிடங்கு அமைக்கவும் பணம் தேவைப்படுகிறதா? கூட்டுறவுத் துறை மூலம் தகுதியானவர்களுக்கு ரூ.30 லட்சம் வரை நீண்டகாலக் கடன் பெறுவதற்கு ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. இதற்காக எங்கே விண்ணப்பிக்க வேண்டும், என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதைப் பார்ப்போம்.

கூட்டுறவு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரூ.1.80 லட்சம் கோடி கடன் வழங்கும் இலக்கை எட்டும் வகையில், வாரந்தோறும் சிறப்புக் கடன் முகாம்களும் கடன் மேளாக்களும் நடத்தப்படுகின்றன.

Cooperative Loan Scheme

கூட்டுறவுத்துறை சிறப்பு முகாம்

இதன்படி, ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் சிங்கப்பெண்கள் கடன்கள் மற்றும் வீட்டு வசதிக் கடன்களுக்கான சிறப்பு முகாம்களும், வெள்ளிக்கிழமைகளில் இதர முன்னுரிமைத் துறைக் கடன் திட்டங்களுக்கான சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளன.

மேலும், கூட்டுறவுத் துறையின் சார்பில் ரூ.50 கோடி மதிப்பிலான நீண்டகாலக் கடன்களும் இந்தச் சிறப்பு முகாம்களில் கூடுதலாக வழங்கப்பட உள்ளன. இதில் வேளாண் இயந்திரமயமாக்கல், குளிர்பதனக் கிடங்குகள் அமைத்தல், கால்நடை வளர்ப்பு (கறவை மாடு, ஆடு, கோழி) மற்றும் அறுவடைக்குப் பிந்தைய உட்கட்டமைப்பு வசதிகளுக்கான கடன்கள் வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் என்னென்ன

தகுதியுடைய உறுப்பினர்களுக்கு அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை நீண்டகாலக் கடன் வழங்கப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் (PCARDB) உரிய ஆவணங்களுடன் பங்கேற்றுப் பயனடையலாம்.

விண்ணப்பத்துடன் புகைப்படங்கள், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, KYC ஆவணங்கள் மற்றும் நில அடமான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பொருளாதார மேம்பாடு அடையலாம். கூடுதல் விவரங்களுக்கு 9884000845 என்ற வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்புகொள்ளலாம்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு பெரும் பலன்

இந்த ஸ்பெஷல் முகாம்கள் மூலம் விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள் வாங்கவும், குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கவும், கறவை மாடு, ஆடு, கோழி வளர்ப்பு போன்ற தொழில்களைத் தொடங்கவும் அல்லது விரிவுபடுத்தவும் நீண்டகாலக் கடன் பெற வாய்ப்பு கிடைக்கிறது.

இதனால் தேவையான முதலீட்டைப் பெற்று, விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை மேம்படுத்தி, வருமானத்தை அதிகரிக்க உதவியாக இருக்கும். தகுதியுள்ள கூட்டுறவு வங்கி உறுப்பினர்களுக்கு அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+