இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு உயரிய விருது.. UAE அதிபர் கட்டியணைத்து செய்த செயல்! நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

துபாய்: 'ஃப்ளைதுபாய்' விமானத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை ஓமன் துணை விமானி தாக்கி கடத்த முயன்றார். அதனை இந்திய விமானி ஸ்மித் மச்சார் தடுத்து அனைத்து பயணிகளையும் காப்பாற்றினார். இதையடுத்து ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

uae-honours-indian-pilot-smit-machchhar-for-his-bravery-act-during-flydubai-flight-cockpit-attack

துபாயில் இருந்து கடந்த செப்டம்பர் 30ம் தேதி இஸ்ரேல் நாட்டின் டெல்அவிவ் நகருக்கு 'ஃப்ளைதுபாய்' விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தை இந்திய பைலட் ஸ்மித் மச்சார் மற்றும் ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி ஆகியோர் இயக்கினர்.

ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி திடீரென்று 'காக்பிட்' கோடரியால் இந்திய விமானியான கேப்டன் ஸ்மித் மச்சாரை கொடூரமாக தாக்கி விமானத்தை கடத்த முயன்றார்.

இந்த விமானத்தில் 174 பயணிகள், 6 விமான பணியாளர்கள் என்று 180 பேர் பயணித்தனர். இதில் பெரும்பாலானவர்கள் இஸ்ரேல் நாட்டைசேர்ந்தவர்கள். இதனால் தான் இந்த விமானத்தை கடத்தி டெல்அவிவ் நகரில் விமான நிலையத்தில் மோத வைத்து விபத்தை ஏற்படுத்த திட்டமிட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

இந்திய பைலட் ஸ்மித் மச்சார், பயணிகள், விமானத்தில் கூடுதலாக பயணித்த பைலட்டுகள் உள்ளிட்டோரின் கூட்டு முயற்சியால் இந்த விமானம் சவுதி அரேபியாவின் தபுக் நகரில் தரையிறக்கப்பட்டது. தற்போது ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தீவிர சிகிச்சைக்கு பிறகு இந்திய விமானி ஸ்மித் மச்சார் மீண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் தான் இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் துணிச்சலை பாராட்டும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் செய்க் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் சார்பில் அவருக்கு உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதின் பெயர் First Class Order of Zayed II என்பதாகும். இந்த விருதை ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் செய்க் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் சார்பில் துபாய் பட்டத்து இளவரசரும், துணை பிரதமருமான சேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் கம்தூம் தான் வழங்கினார் முன்னதாக விருது வாங்க சென்ற ஸ்மித் மச்சாரை ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் செய்க் முகமது பின் ஜயாத் அல் நஹ்யான் கட்டியணைத்து வாழ்த்து தெரிவத்தார்.

இந்த விருது ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகவும் உயரிய விருதாகும். ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசத்தந்தையான சேக் ஜாயத் பின் சுல்தான் அல் நஹ்யான் பெயரால் வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக வெளிநாட்டு தூதர்கள், உயரதிகாரிகள், ஐக்கிய அரபு அமீரகத்துடன் நெருக்கமாக செயல்படம் தலைவர்கள், பொருளாதாரம் மற்றும் பொது பாதுகாப்பை உறுதி செய்யும் நபர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஸ்மித மச்சாருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஸ்மித் மச்சார் மட்டுமின்றி அன்றைய தினம் 'ஃப்ளைதுபாய்' விமானத்தில் பணியில் இருந்த அனைத்து ஊழியர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+