கர்ப்பம் ஆகவில்லை.. உறவினர்கள் கேலி செய்ததால் குழந்தை திருட்டு.. கோவை பெண் வாக்குமூலம்
கோவை அருகே இனிமேல் கர்ப்பம் ஆகமாட்டோம் என்ற விரக்தியில் பச்சிளம் குழந்தையைக் கடத்திய பெண் ஒருவரை அந்நகர போலீசார் கைது செய்தனர்.
கோவை: பச்சிளம் குழந்தை திருடப்பட்டு ஒரு மணி நேரத்தில் அந்தக் குழந்தையை மீட்டு கோவை போலீசார் அதன் தாயிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும், இனிமேல் கர்ப்பம் ஆகமாட்டோம் என்ற விரக்தியில் குழந்தையை திருடிய இளம் பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை புறநகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கருச் சிதைவு செய்துள்ளார். இந்நிலையில், அவருக்கு இந்நாள் வரை மீண்டும் கர்ப்பம் ஆகாமல் இருந்துள்ளார்.

இதனால், அவரது உறவினர்கள் அவரை மனம் நோகும் படி பேசியுள்ளனர். இந்த அவதூறு பேச்சுக்களில் இருந்து விடுபட விரும்பிய அந்தப் பெண் தான் கர்ப்பம் ஆனது போல் கடந்த ஜனவரி மாதம் முதல் நடித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனைக்குச் சென்ற அந்தப் பெண் ஜோதி என்ற பெண்ணின் பெட் அருகில் நின்றுள்ளார். அப்போது குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு அங்கு வெளியில் சென்று திரும்பி வந்ததாக தெரிகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அந்த பெண் பச்சிளம் குழந்தையுடன் தப்பிச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து ஜோதி கோவை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் நடத்திய விசாரணையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் ஆட்டோ டிரைவர் அடையாளம் காட்டியதின் பேரில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.
குழந்தையை திருடிச் சென்ற அந்த பெண் வீட்டிற்கு சென்று உறவினர்களிடம் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக கூறி நாடகம் ஆடியிருக்கிறார். குழந்தையை பறி கொடுத்த ஜோதிக்கு 3 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications