23 தனியார் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு.. மர்ம நபர்கள் கைவரிசை.. திருவள்ளூரில் பரபரப்பு
திருவள்ளூரில் தனியார் பேருந்துகளின் கண்ணாடிகளை அடித்து, நொறுக்கிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர்: திருவள்ளூரில் 23 தனியார் பேருந்துகளின் கண்ணாடிகளை மர்மநபர்கள் அடித்து, நொறுக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், காட்டுகூட்டுச்சாலை, ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் பல தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் பணிக்கு வந்து செல்வது வழக்கம். இதற்காக தனியார் நிறுவனங்கள் பேருந்து வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

வேலை முடிந்ததும் பணியாளர்களை பேருந்தில் அழைத்து சென்று அவர்களின் பகுதிகளில் இறக்கி விட்டுவிட்டு, பின்னர் திருவள்ளூர், ஆயில் மில், மணவாளநகர், மேல்நல்லாத்தூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் பேருந்துகளை நிறுத்தி விடுவார்கள்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். இதையடுத்து காலையில் ஓட்டுநர்கள் வந்து பார்த்தபேது கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் 23 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாக மணவாளநகர் போலீசில் அவர்கள் புகார் அளித்தனர்.
இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: இரவில் மது போதையில் இருந்த இளைஞர்கள்த சிலர் இப்படி செய்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்கள் கூறினர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications