“நாமும் வாழ்வோம்... பிறரையும் வாழ வைப்போம்”... இந்து ஆன்மிக கண்காட்சியில் மத்திய அமைச்சர் பேச்சு
சென்னை: சென்னையில் நடந்து வரும் இந்து ஆன்மிக கண்காட்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் அனில் ஆனந்த் தவே, "இந்து தத்துவப்படி நாமும் வாழ்வோம், பிறரையும் வாழவைப்போம்" என்றார்.
8-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி சென்னை மீனம்பாக்கம், ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள 450 அரங்குகளையும் பார்வையாளர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்தக் கண்காட்சியில் தினந்தோறும் வெவ்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, நேற்று இயற்கை வழிபாட்டை வலியுறுத்தும் வகையில் 1,008 துளசி செடிகளை போற்றி வணங்கும் 'துளசி வந்தனம்', 'கோ வந்தனம்' (பசு வந்தனம்) மற்றும் 'கஜ வந்தனம்' (யானை போற்றுவது) ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

துளசி மாடம்...
இதற்காக மேடையில் பெரிய அளவிலான துளசி மாடம், அதன் அருகில் கிருஷ்ணர் சிலை, அதனை சுற்றி பெரிய யானை பொம்மைகள் மற்றும் பசு கன்றுகளுடன் நிற்பது போன்ற பொம்மைகள் அமைக்கப் பட்டிருந்தது.

பயனுள்ள தகவல்கள்...
இந்த நிகழ்ச்சியை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் ஆனந்த் தவே தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "பசு வந்தனம், ‘கஜ வந்தனம்' மற்றும் ‘துளசி வந்தனம்' செய்வதன் மூலம் வாழ்க்கைக்கு தேவையான பயனுள்ள பல தகவல்களை அறிந்து கொள்ள முடியும். குறிப்பாக மாணவர்கள் நன்கு பயனடைவார்கள்.

பசுவின் பயன்கள்...
குழந்தைகளுக்கு பசு பற்றி அதிகம் தெரிந்து கொள்ள முடிகிறது. பசுவிடம் இருந்து கிடைக்காத சொத்தே இல்லை. குறிப்பாக பால் மட்டுமல்லாது சாணம், கோமியம் போன்றவை நம் உடல் நலனுக்கு அதிக பலனளிக்கிறது. எனவே குடும்பத்தில் ஒருவராகத் தான் பசுவை பார்க்க வேண்டும். ஒரு பசு இருந்தால் 30 ஏக்கர் நிலத்துக்கு தேவையான உரம் கிடைக்கும் என்று பாலேக்கர் என்ற விஞ்ஞானி கூறி உள்ளார். பசு இறந்தாலும் அந்த இடத்தில் தீங்கு விளைவிக்காத உரம் கிடைக்கிறது.

யானை...
நாம் யானையைவிட மிகப்பெரிய உயிரினத்தை நிலத்தில் பார்க்க முடியாது. இதனுடைய தும்பிக்கையால் புழுதியில் கிடக்கும் ஊசியையும் மற்றும் ஆலமரத்தையும் தூக்கி எடுக்க முடியும். ஆக மனிதனுக்கு உதவும் விலங்காக யானை திகழ்கிறது. நாம் அதற்கு தொந்தரவு செய்யாத வகையில் அது யாரையும் தொந்தரவு செய்வதில்லை.

துளசியின் மகத்துவம்...
துளசியில் உள்ள 5 பாகங்களான வேர், தண்டு, இலை, பூ, காய் இவை மகத்துவமானதுடன், மருத்துவ குணம் படைத்தவை. இதனையும் பள்ளி மாணவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இந்து தர்மம் எல்லோரையும் வாழ வைக்கும் தர்மமாக இருக்கிறது. எனவே இந்து ஆன்மிக தத்துவப்படி நாம் வாழ்வோம், பிறரையும் வாழவைப்போம் என்ற கருத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

நன்றி...
மாணவர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் இந்த கண்காட்சியை அமைத்த அமைப்பாளர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை மட்டும் அல்லாது நாடு முழுவதும் இந்த கண்காட்சியை நடத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications