பால் கலப்படத்தை நிரூபிக்கலைன்னா ராஜேந்திர பாலாஜி ராஜினாமா செய்க!... பொன்னார் பொளேர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பால் கலப்பட விவகாரத்தில் உண்மையை நிரூபிக்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்யுமாறு மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், மக்கள் பிரதிநிதிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். தமிழகம் முன்னேற்றம் அடைய வேண்டுமெனில் கல்வித் தரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.

 Union minister Pon.Radhakrishnan urges minister Rajendrabhalaji to take action against milk adulteration

பால் கலப்பட விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீதுஅமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏற்கனவே சொன்னது போல தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். திமுக இப்போது ருத்ராட்சம் அணிந்த பூனையாகிவிட்டது என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Union minister Pon.Radhakrishnan insists that if Minister Rajendra bhalaji not able to prove the milk adulteration he must resign
Please Wait while comments are loading...