பாதிப்பு நேரத்தில் எந்த அரசையும் குறை சொல்லக் கூடாது... பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி!
புயல் பாதிப்பு நேரத்தில் எந்த அரசையும் குறை சொல்லக் கூடாது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நாகர்கோவில் : புயல் பாதித்துள்ள நேரத்தில் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை என்றும் எந்த அரசு நடந்தாலும் பாதிப்பு நேரத்தில் குறை சொல்லக் கூடாது என்றும் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் பேரழிவை சந்தித்து உள்ளது, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தஞ்சம் அடைந்து இருக்கும் மீனவர்களுக்கு மத்திய துறை அதிகாரிகள் மூலமாக உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது, குமரிமாவட்டம் தூத்தூர் பகுதியை சேர்ந்த கடலை பற்றி நன்கு தெரிந்த 25 மீனவர்கள் தேர்வு செய்யப்பட்டு கப்பல் மூலமாக ஆழ்கடல் தீவுகளிலும் மீனவர்களை தேட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

குமரியில் நடந்து வரும் மீனவர் போராட்டம் அவர்களின் வேதனையை வெளிப்படுத்துகிறது, மாநில அரசு கேட்கும் உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது, புயல் பாதிப்பு ஏற்பட்டு உள்ள நேரத்தில் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. எந்த அரசு நடந்தாலும் பாதிப்பு நேரத்தில் குற்றம் சொல்ல கூடாது.
3117 மீனவர்கள் மீட்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளாவை போன்று நிவாரணம் வழங்க வேண்டும், 150 ரூபாய் 200 ரூபாய் மதிப்புள்ள வாழை மரங்களுக்கு அரசு 3 ரூபாய் 7 ரூபாய் என நிவாரணம் கொடுப்பது விவசாயிகளை அவமானப்படுத்தும் செயல், விவசாயம் செய்யப்பட்ட பொருள் அறுவடை நேரத்தில் கிடைக்கும் பணத்தை நினைவில் கொண்டு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications