திராவிட நாடு.. யூனைட்டட் ஸ்டேட்ஸ் ஆப் சௌத் இந்தியா… பெயர் சூட்டி மகிழும் நெட்டிசன்கள்
மாட்டிறைச்சி தடையால் திராவிடநாடு என்ற கோஷம் மீண்டும் விவாத பொருளாக மாறியுள்ளது. திராவிட நாட்டிற்கு யூனைட்டட் ஸ்டேட்ஸ் ஆப் சௌத் இந்தியா என்ற பெயர் சூட்டி டுவிட்டரில் நெட்டிசன்கள் மகிழ்ந்து வருகின்றனர்.
சென்னை: மாட்டிறைச்சிக்கு தடை என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் கடும் எதிர்ப்பு பாஜவிற்கு எழுந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து திராவிடம் குறித்த கருத்தாக்கங்கள் மீண்டும் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பேசும் பொருளாக மாறியிருப்பதோடு, முக்கிய சமூக இயக்கங்களைச் சேர்ந்தவர்களும், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
யூஎஸ்ஏ என்று அமெரிக்காவை அழைப்பது போன்று புதிதாக உருவாகும் திராவிட நாட்டிற்கு யூனைட்டட் ஸ்டேட்ஸ் ஆப் சௌத் இந்தியா என்றும் அதன் சுருக்க வடிவமாக யூஎஸ்எஸ்ஐ என்ற சொல்லை உருவாக்கி டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
|
யூனைட்டட் ஸ்டேட்ஸ்
திராவிட நாட்டிற்கு யூனைட்டட் ஸ்டேட்ஸ் ஆப் சௌத் இந்தியா என்று மோகன் சந்தர் என்பவர் தனது பக்கத்தில் டுவிட் செய்துள்ளார்.
|
திராவிட நாடு குரல்
பாஜகவின் மூன்றாண்டு கால ஆட்சி திராவிட நாட்டிற்கு குரல் கொடுக்க சக்தி அளித்திருக்கிறது என்று பிரதாப் கிருஷ்ணசாமி பதிவிட்டுள்ளார்.
|
புதிய நாடு
நாங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நாங்கள் முடிவெடுத்துக் கொள்கிறோம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள சாஜ், புதிய நாட்டிற்கான சிந்தனையை பாஜக உருவாக்கியுள்ளது என்று கூறியுள்ளார்.
|
அண்ணாவே கொடுத்திருக்கலாம்
"அண்ணா காலத்தியிலேயே பிரிஞ்சு போய் இருந்திருக்கணும்" என்று முகம்மது ரஸ்வி என்பவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications