Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாய்லெட் போக கூட வழி இல்ல! ரிசர்வ் கோச்சை ஆக்கிரமித்த வடமாநிலத்தவர்கள்: ரயிலை நிறுத்தியதால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: ரயிலில் முன்பதிவு பெட்டியில் ஏறி, பயணிகளை டாய்லெட் கூட செல்லவிடாமல் வடமாநில தொழிலாளர்கள் ஆக்கிரமித்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ஜோலார்பேட்டையில் ரயிலை நிறுத்தியுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் 'இந்திய ரயில்வே' முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இது 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. ஆனால் இவ்வளவு பழமை வாய்ந்த ரயில்வே துறை சமீப நாட்களாக கடும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. குறிப்பாக போதுமான அளவு ரயில்களை இயக்குவதில்லை என்கிற விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

 Uproar as North Indian workers occupy reserved train coaches at Jollarpet

போதுமான ரயில்கள் இயக்கப்படாததன் காரணமாக ரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சில நேரங்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில், முன்பதிவு செய்யாத பயணிகள் ஏறி மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இது போன்ற சம்பவங்கள் சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக வடமாநில தொழிலாளர்கள் முன்பதிவு செய்யாமல் டிக்கெட் எடுத்துக்கொண்டு, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறி அதை ஆக்கிரமித்து விடுகின்றனர். இதனால் அங்குள்ள பயணிகள் மிகுந்த தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர்.

நேற்றிரவும் இப்படியான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது கேரள மாநிலம் கொச்சியிலிருந்து, உ.பியின் கோரக்ப்பூர் வரை வாரம் ஒருமுறை ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இது நேற்றிரவு கோவை வந்து சேர்ந்தது. அங்கிருந்து புறப்பட்ட நிலையில், திடீரென முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் வடமாநில தொழிலாளர்கள் சரசரவென ஏற தொடங்கினர். அவர்களிடம் முன்பதிவு செய்ததற்கான எந்த டிக்கெட்டும் இருக்கவில்லை.

இருப்பினும் கிடைத்த இடத்தில் அமர்ந்து முழு பெட்டியையும் ஆக்கிரமித்தனர். குறிப்பாக டாய்லெட் செல்லும் வழியை முற்றிலுமாக மறித்திருக்கின்றனர். இதனால் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் பெண்கள் கடும் அவதியுற்றுள்ளனர். ஒரு கட்டத்தில் இந்த ஆக்கிரமிப்புகளை பொறுத்துக்கொள்ள முடியாத பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். ரயில் ஜோலார்பேட்டை நிலையத்தில் நின்றதையடுத்து, ரயில்வே போலீசார் உரிய டிக்கெட் இல்லாத வடமாநில தொழிலாளர்களை அப்பெட்டியிலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

தொடர்ச்சியாக மூன்று முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை இந்த தொழிலாளர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தது போலீசார் நடத்திய சோதனையில் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை அந்தப் பெட்டிகளிலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் மற்ற பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர். இதுபோன்ற ஆக்கிரமிப்பு சம்பவங்கள் இன்று, நேற்று நடப்பது கிடையாது. கடந்த பல ஆண்டுகளாகவே இது தொடர்ந்து வருகிறது.

 Uproar as North Indian workers occupy reserved train coaches at Jollarpet

140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் தினமும் சில கோடி பேர் ரயில் பயணம் செய்கின்றனர். ஆனால் இவர்களுக்கு தேவையான அளவு போதுமான பயணிகள் ரயில் இயக்கப்படுகிறதா? என்று கேட்டால் இல்லை என்றே பதில் வருகிறது. அதுவும் பண்டிகை காலங்களில் போதுமான ரயில்கள் இல்லாததால் மக்கள் முந்தியடித்துக்கொண்டு ஏறி கிடைக்கும் இடங்களில் அமர்ந்துகொள்கின்றனர். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை இரவு என்பது ரயில் பயணிகளுக்கு போர் களம் செல்வதை போல இருக்கிறது.

இப்படி அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏறும்போது சிறு விபத்து நேரிட்டாலும் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே போதுமான ரயில்களை இயக்க வேண்டும் என்றும், முன்பதிவு செய்யப்படாத பயணிகளுக்கான பெட்டிகளை அதிகரிக்க வேண்டும் எனவும் மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதை சாத்தியப்படுத்தினால் மட்டுமே மேற்குறிப்பிட்டது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+