தூத்துக்குடி: கப்பலில் ஆயுதங்கள்- கூடுதல் தகவல் தர மாலுமிகள் மறுப்பு! விரைவில் கைது?
தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்பரப்பில் சிக்கிய அமெரிக்க தனியார் நிறுவன பாதுகாப்பு கப்பலில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்ததாகவும் அது குறித்த கூடுதல் தகவல்களைத் தெரிவிக்க அதன் மாலுமிகள் தொடர்ந்து மறுத்து அடம் பிடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.விரைவில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனத்திருக்கு சொந்தமானது சீ மேன் கார்டு ஓஹியோ என்ற பெயருள்ள கப்பல். சர்வதேச சட்டவிதிகளுக்கு உட்பட்டு கடல் கொள்ளையர்களிடமிருந்து கடலில் சரக்குகளை ஏற்றிசெல்லும் கப்பலை பாதுகாப்பாக அந்தந்த துறைமுகங்களுக்கு கொண்டு செல்வது இவர்களது பணி.
10 மாலுமிகள் மற்றும் 25 கடல் பாதுகாவலர்களைக் உள்ளடக்கிய இந்த கப்பல் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்ததால் சனிக்கிழமையன்று சந்தேகத்தின் பேரில் இந்த கப்பலை தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்து தூத்துக்குடி துறைமுகம் கொண்டு வந்தனர்.

துருவி துருவி விசாரணை
பல்வேறு துறை அதிகாரிகளுடன் கப்பலில் மேற்கொண்ட சோதனையில் இந்த கப்பலில் உள்ள துப்பாக்கிகள் அனைத்தும் சர்வதேச உரிமம் பெற்றது என தெரியவந்துள்ளது.

முதலில் ஆயுதம் இல்லை என தகவல்
மேலும் சந்தேகத்திற்கிடமான பொருட்களோ, வெடிமருந்தோ, ஆயுதங்களோ இந்த கப்பலில் இல்லை என்று சில நாட்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டது.

இப்போது ஆயுதங்கள் இருப்பதாக தகவல்
தற்போது கப்பலில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவைகள் பதுக்கி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளன.

மாலுமிகள் அடம்
கப்பல் பிடிப்பட்டு 3 நாட்களாகியும் கப்பல் நிறுவனத்தின் தரப்பிலிருந்து சரியான தகவல்கள் தெரிவிக்க மாலுமிகள் மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நடுக்கடலில் டீசல் பிடிப்பு
மேலும் கப்பல் சர்வதேச விதிமுறைகளை மீறி நடுக்கடலில் டீசல் பிடித்துள்ளதகவும் கூறப்படுகிறது.

35 பேர் மீது வழக்கு
இந்திய கடல் பகுதிக்குள் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் வைத்திருந்ததாக கப்பலில் வந்த ஊழியர்கள் உட்பட 35 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.

விரைவில் கைது?
இந்த வழக்கை அடுத்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் கைது நடவடிக்கைகளும் இருக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications