தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்து இந்த '9444123456' வாட்ஸ்ஆப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்
சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டால் அது குறித்து மக்கள் வாட்ஸ்ஆப் மூலம் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 16ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் கட்சிகள் கூட்டணியை முடிவு செய்வதில் முனைப்பாக உள்ளன. இதற்கிடையே தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளவர்களிடம் நேர்காணலும் நடந்து வருகிறது.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் பற்றி புகார் அளிப்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறுகையில்,
தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படுவது பற்றி தெரிய வந்தால் மக்கள் எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் புகார் அளிக்கலாம். விதிமீறல் குறித்த புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வாட்ஸ்ஆப்பில் அனுப்பி வைக்கலாம்.
தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க விரும்புவோர் 9444123456 என்ற எண்ணில் வாட்ஸ்ஆப் மூலம் தொடர்பு கொள்ளலாம். மேலும் 150 என்ற எண்ணிலும் மக்கள் புகார் அளிக்கலாம்.
ஆதாரத்துடன் வரும் வாட்ஸ்ஆப் புகார்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Click it and Unblock the Notifications
