'உதவாக்கரை பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப் விற்பனைக்கு': இ-பேயில் விளம்பரம்
சென்னை: அமெரிக்க ஆன்லைன் வர்த்தக நிறுவனமான இ-பேயில் ஒருவர் உதவாக்கரை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விற்பனைக்கு என்று விளம்பரம் கொடுத்துள்ளார்.
அமெரிக்க ஆன்லைன் வர்த்தக நிறுவனமான இ-பேயில் வெளியான விளம்பரம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. காரணம் ஒருவர் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விற்பனைக்கு என்று விளம்பரம் கொடுத்துள்ளார்.

அவர் தனது விளம்பரத்திற்கு 'உதவாக்கரை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விற்பனைக்கு' என்று தலைப்பிட்டுள்ளார்.
அந்த விளம்பரத்தில் கூறியிருப்பதாவது,
பயன்படுத்தப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விற்பனைக்கு. இனியும் அவர் தேவையில்லை. பெட்டியில் எல்லாம் கொடுக்க முடியாது. விருப்பம் உள்ளவர்கள் வந்து வாங்கிக் கொள்ளலாம். மத்திய லண்டனுக்கு வந்து இன்று வாங்கிக் கொள்ளலாம். விற்பனை உறுதி செய்யப்பட்டதும் முகவரி அளிக்கப்படும்.
இந்த பொருளும், அதன் குடும்பமும் நல்ல நிலைமையில் இல்லை. இந்த பொருள் பிறப்பில் இருந்தே சரியில்லை. இதை வாங்கினால் சிறிய பேக்கில் மிஸ்டர் ஷாபாஸ் ஷெரீப் இலவசம். அந்த பொருள் நடிப்பில் சிறந்தது ஆனால் ஒன்றுக்கும் உதவாதது. பெரும்பாலும் இங்கிலாந்து, அமெரிக்கா, துருக்கியில் தான் இருக்கும்.
லண்டனில் சொத்து, வியாபாரம் எல்லாம் இருக்கையில் பாகிஸ்தான் பிரதமர் ஆக விரும்புகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவாஸ் ஷெரீப் மருத்துவ பரிசோதனைக்காக லண்டன் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications