கந்து வட்டிக் கொடுமையா.. தைரியமா புகார் கொடுங்க.. மக்களுக்கு முதல்வர் உத்தரவு
கந்து வட்டி தொடர்பான புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: கந்துவட்டி தொடர்பான புகார்களை உடனுக்குடன் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர்களுக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் காசிதர்மத்தில் இசக்கி முத்து- சுப்புலட்சுமி தம்பதி, கந்து வட்டி கொடுமையால் தனது இரு குழந்தைகளுடன் திங்கட்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தார்.

இதில் சுப்புலட்சுமியும், இரு குழந்தைகளும் உயிரிழந்துவிட்டனர். இசக்கி முத்து சிகிச்சை பெற்று வருகிறார். இது தமிழகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்தது.
அதீத வட்டி வசூல் செய்பவர்களிடமிருந்து பொதுமக்களை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும். #EndKandhuVatti
— Edapadi KPalaniswami (@CMOTamilNadu) October 25, 2017
இந்நிலையில் கந்து வட்டி தொடர்பாக ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கந்து வட்டி தொடர்பான புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் எந்த வித அச்சத்திற்கும் ஆளாகாமல் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரையும் காவல்துறை அதிகாரியையும் அணுகலாம் #EndKandhuVatti
— Edapadi KPalaniswami (@CMOTamilNadu) October 25, 2017
அதீத வட்டி வசூலித்தல் தடை சட்டம் 2003-இன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் காவல் துறையையும் ஆட்சியரையும் அணுகி நிவாரணம் பெறலாம்.
அதீத வட்டி சம்மந்தமாக மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கையை துரிதமாக எடுக்கும்படி உத்தரவிட்டுளேன். #EndKandhuVatti
— Edapadi KPalaniswami (@CMOTamilNadu) October 25, 2017
கந்து வட்டி வசூலிப்பவர்களிடம் இருந்து மக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். அதிக வட்டி வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
வட்டிக்கு பணம் பெற்றவர்கள் தாங்கள் பெற்ற பணத்தை நீதிமன்றம் மூலம் செலுத்தலாம். மேலும் சட்டத்துக்கு புறம்பான வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடமிருந்து பெறப்பட்ட சொத்துகள் மீட்கப்படும் என்று அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.
-
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications