ஓ.பி.எஸ். தான் முதல்வராக தொடர வேண்டும்: ஊத்தங்கரை எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் பேட்டி
ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மனோராஞ்சிதம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தான் தொடர வேண்டும் என ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக குரல் எழுப்பியதால் பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் பதவியை பறித்தார் சசிகலா. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மூத்த நிர்வாகிகள் எம்.பிக்கள் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். சசிகலாவிற்கு எதிராக கலகக்குரல் எழுப்பி வரும் சசிகலா புஷ்பா உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேபோல் சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ ராஜமாணிக்கம், கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆறுக்குட்டி ஆகியோர் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளனர்.
இந்நிலையில் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் இன்று மாலை ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மனோரஞ்சிதம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர் ஓ.பி.எஸ்., நல்ல ஒரு ஆட்சியைத் தந்து கொண்டுள்ளார். மீண்டும் அவர்தான் முதல்வராக தொடர வேண்டும் என்றார்.
முன்னதாக இன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மனோரஞ்சிதம் கலந்துகொள்ள வில்லை. உடல்நலக்குறைவால் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. முதல்வருக்கு குவிந்து வரும் ஆதரவு மேலும் வலுப்படும் என்றே அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications