வெறும் கேட்டு மட்டும்தான்யா இருக்கு, சங்கத்தை காணோம்: வடிவேலு
மதுரை: நடிகர் சங்க தேர்தலில் விஜயகாந்திடம் ஆதரவு கேட்பீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அந்த கடையை மூடுங்க என்று தெரிவித்துள்ளார் நடிகர் வடிவேலு.
நடிகர் சங்க தேர்தல் களத்தில் இருக்கும் விஷால் தலைமையிலான பாண்டவர் அணிக்கு வடிவேலு ஆதரவு கோரி வருகிறார். இந்நிலையில் அவர் மதுரையில் உள்ள நாடக நடிகர்களை சந்தித்து பாண்டவர் அணிக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

பாண்டவர் அணி
வெறும் கேட் மட்டும் தான் இருக்கு. நடிகர் சங்கத்தை காணவில்லை. காணாமல் போன, களவு போன நடிகர் சங்கத்தை கண்டுபிடிக்கத் தான் விஷால் அணியில் சேர்ந்துள்ளேன்.

சமரசம்
இனி எதிரணியுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. யார் வெற்றி பெறப் போகிறார்கள், யார் தோல்வியடைப் போகிறார்கள் என்பதை தான் பார்க்க வேண்டும். அனைத்து நடிகர்களுக்கும் நல்லது செய்யும் ஆண்டவர் அணி இந்த பாண்டவர் அணி.

அரசியல்
முன்பு தேர்தல் நேரத்தில் அரசியலுக்கு வந்தது வேறு, தற்போதைய சூழல் வேறு. அந்த அரசியலை இதில் கலந்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நாடக நடிகர்கள்
18ம் தேதி சங்க தேர்தல் நடக்கும்போது எந்த அணிக்கு நாடக நடிகர்களின் முழு ஆதரவு உள்ளது என்பது தெரிய வரும். நாங்கள் ஓட்டு கேட்டு யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. நாங்களே நொந்து போயுள்ளோம், இதில் பணம் கொடுக்கிறோமா?

திமுக
கடந்த சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளித்தேன். தற்போது நான் எந்த கட்சிக்கும் போகப் போவது இல்லை. நடிகர் சங்க தேர்தலில் மட்டுமே ஏன் கவனம். தீவிர அரசியலில் ஈடுபட ஆசை இல்லை. நான் ஏன் திமுகவிற்கு சென்றேன் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். அதை மறுபடியும் முதலில் இருந்து சொல்லத் தேவையில்லை என்றார் வடிவேலு.

விஜயகாந்த்
நடிகர் சங்க தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் ஆதரவு கேட்பீர்களா என்று செய்தியாளர் ஒருவர் வடிவேலுவிடம் கேட்டார். அதற்கு அவரோ, அந்த கடையை மூடுங்க என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications