“வை ராஜா மை”... மிஸ்டு கால் கொடுத்து ஒரு கோடி இளம் வாக்காளர்களைக் கவர் செய்யும் தேர்தல் ஆணையம்
சென்னை: முதன்முறையாக ஓட்டு போடவுள்ள இளம் வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘வை ராஜா மை' என்ற விழிப்புணர்வு மிஸ்டு கால் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் இம்முறை சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான இளம் வாக்காளர்கள் உள்ளனர். முதல் முறை வாக்குப் பதிவு செய்யும் இவர்கள் அனைவரும், மறக்காமல் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றச் செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில், தேர்தல் கமிஷன் அனுமதியுடன் 'ஸ்மைல் சேட்டை' என்ற 'யூ டியூப்' வீடியோ பதிவேற்றத்தினர், 'வை ராஜா மை' என்ற பெயரில், 24 மணி நேர, 'மிஸ்டு கால்' சேவையை துவக்கி உள்ளனர்.

இளம் வாக்காளர்கள்...
இது குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் கூறுகையில், "வாக்காளர் பட்டியலில், ஒரு கோடி இளம் வாக்காளர்கள் உள்ளனர். ஓட்டுப் பதிவில், இளம் வாக்காளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம்.

மிஸ்டு கால்...
எனவே, இளம் வாக்காளர்களை ஓட்டு போட வைக்க வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டுள்ளோம். இதற்காக ஓட்டு போட ஆர்வமுள்ள, இளம் வாக்காளர் கள், 78787 45566 என்ற மொபைல் எண்ணில், 'மிஸ்டு கால்' கொடுக்கும்படி கேட்டு வருகிறோம்.

நம்பிக்கை...
இது குறித்து, சமூக வலைதளங்களில், 24 மணி நேரமும் பிரசாரம் மேற்கொண்டுள்ளோம். 'மிஸ்டு கால்' கொடுப்பவர்கள் நிச்சயம் ஓட்டும் போடுவர் என்ற நம்பிக்கை உள்ளது.

1.17 லட்சம் பேர்...
மே, 2ம் தேதி துவங்கிய, இப்பணியில் இதுவரை 1.17 லட்சம் பேர், 'மிஸ்டு கால்' கொடுத்துள்ளனர். ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து எத்தனை முறை மிஸ்ட் கால் கொடுத்தாலும், ஒரு முறை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு ஒரு முறையும் மிஸ்ட் கால்களின் எண்ணிக்கை பதிவேற்றப்படும்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications