ஒபாமா உருவபொம்மை எரிப்பு: அமெரிக்க துணை தூதரகம் முற்றுகை - வைகோ உள்பட 1000 பேர் கைது
சென்னை: அமெரிக்க அதிபர் ஒபாமா, இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே உள்ளிட்டோரின் உருவபொம்மையை எரித்து அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வைகோ உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை தமிழர் படுகொலையில் நீதியை அழிக்க உள்நாட்டு விசாரணை என துரோகம் செய்யும் அமெரிக்காவை கண்டித்து சென்னையில் இன்று அமெரிக்க துணை தூதரகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது
எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ம.தி.மு.க., மே 17 இயக்கம், தமிழக வாழ்வுரிமை கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்பட பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
இந்த போராட்டத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, கோவை ராமகிருஷ்ணன், சத்திரியன் வேணுகோபால், மணிமாறன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உருவபொம்மை எரிப்பு
போராட்டத்தில் முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே, அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோரது உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டது. மேலும் அமெரிக்காவை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.

வைகோ கைது
அங்கிருந்து முற்றுகை போராட்டத்துக்கு சென்ற வைகோ உள்பட அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். வைகோ உள்பட 1000 பேர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

சர்வதேச நீதி விசாரணை
இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இலங்கையில் 2009-ல் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்று நாங்கள் போராடி வருகிறோம்.உள்நாட்டு விசாரணையே போதும் என்று அமெரிக்கா கூறி வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த போராட்டத்தின் மூலம் அமெரிக்கா தனது நிலையை மாற்றிக்கொண்டு சர்வதேச விசாரணைக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

முழுமையான ஆதரவு
ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடரில் தீர்மானமாக கொண்டு வந்ததை அமுல்படுத்த வேண்டும். சர்வதேச நாடுகளும் இலங்கை இனப்படுகொலை விசாரணைக்கு முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications