சிறுதாவூரில் பதுக்கிய பணத்தை ஆந்திராவிற்கு கடத்தி விட்டார்கள்: வைகோ
மதுரை: என் காரை சோதனை நடத்திய தேர்தல் அதிகாரிகள், சிறுதாவூர் பங்களாவில் சோதனை நடத்த தவறியதால் பெருமளவு பணம் ஆந்திராவுக்கு கடத்தப்பட்டுள்ளது என்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்றைய பேட்டியின் போது செய்தியாளர்களின் சரமாரி கேள்விகளால், அடிக்கடி அவர், டென்ஷன் ஆனார். பேட்டியை முடித்து, காலை உணவு சாப்பிட துவங்கியதும் அவர் ஜாலியானார்.
மதுரையில் நேற்று காலையில் தனியார் ஹோட்டல் ஒன்றில் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஜெயலலிதாவுக்கு தேர்தல் தோல்வி பயம் ஏற்பட்டுவிட்டது. அதனால்தான் ஆட்சியில் ஊழல் செய்து கொள்ளையடித்த பணத்தை சிறுதாவூர் பங்களாவில் பதுக்க லாரிகளில் கொண்டு சென்றுள்ளனர் என்றார்.

மூட்டை மூட்டையாக பணம்
ஒரு கன்டெய்னர் பங்களாவின் முன்வாசல் வழியாகவும், இன்னொரு கன்டெய்னர் காம்பவுண்டு சுவரை இடித்துக் கொண்டும் சென்றுள்ளது. அதிலிருந்த பண மூட்டைகள் இரவோடு இரவாக பங்களாவில் இறக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் 15 லாரிகள் சென்றுள்ளன. ஊழல் செய்து கொள்ளையடித்த பணத்தை சிறுதாவூர் பங்களாவில் பதுக்க கண்டெய்னர் லாரியில் கொண்டு சென்றுள்ளனர்.

சோதனை செய்யவில்லை
அவை தேர்தல் பிரசாரத்திற்காக தயார் செய்யப்பட்ட வாகனங்கள் என்கிறார்கள்.பிரசார வாகனத்தை தயார்படுத்த அதிமுகவிற்கு வேறு இடமே கிடைக்கவில்லையா? என் காரை கூட சோதனை செய்தார்கள். எதுவும் இல்லை என்று விட்டுவிட்டார்கள்.

ஜெயலலிதாவின் எடுபிடிகள்
தமிழக தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்த உடனேயே அதிகாலையிலேயே போலீசை அனுப்பி சிறுதாவூர் பங்களாவை சோதிக்காதது ஏன்? மாவட்ட ஆட்சியரிடமும்,எஸ்.பியிடமும் அறிக்கை கேட்டிருப்பதாக தேர்தல் அதிகாரி கூறுகிறார்.அவர்கள் இருவரும் ஜெயலலிதாவின் எடுபிடிகள். இப்போது சிறுதாவூரில் இருந்து பெருமளவு பணம் ஆந்திரா அனுப்பப்பட்டுவிட்டது என்று கூறினார்.

டிவி பேட்டியில் கோபம் ஏன்?
பேட்டியின் போது செய்தியாளர்களின் சரமாரி கேள்விகளால், அடிக்கடி அவர், டென்ஷன் ஆனார். பேட்டியை முடித்து, காலை உணவு சாப்பிட துவங்கியதும் அவர் ஜாலியானார். என் அலுவலகத்தில் தனியார், டிவியில் பேட்டியின் போது, கோபப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் கேள்வி கேட்டனர். கேள்வி கேட்ட செய்தியாளரை நான் திட்டவில்லை, எழுந்து சென்றேன்.

மனசு சரியில்லை
அறைக்கு வெளியில் நான்கு மாவட்ட செயலர்கள் நின்றனர். எதிர்த்து பேசாமல், அமைதியாக இருந்தனர். இதே கேள்வியை, வேறு கட்சி தலைவர்களிடம் அவர்களது அறையில் கேட்க முடியுமா; அன்று, மனசு சரியில்லை. கடற்கரைக்கு சென்று, அரைமணி நேரம் இருந்தேன்.

துணை முதல்வர்
'தே.மு.தி.க.- ம.ந.கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விஜயகாந்த் முதல்வர், வைகோ துணை முதல்வர்' என, சுதீஷ் கூறினார். உடனடியாக, அதை என்னால் மறுக்க முடியவில்லை, மறுநாள் என் கருத்தை தெரிவித்தேன் என்றார் வைகோ.

வைகோ உடன் பிரேக் பாஸ்ட்
தொடர்ந்து வைகோ, செய்தியாளர்கள் சாப்பிடுவதற்கு தட்டு எடுத்து கொடுத்தார். 'நீங்கள் சாப்பிட வாங்க...' என அவர்கள் அழைத்தபோது, ''நான், சிறையிலேயே வரிசையாக நின்று, கடைசியாக தான் சாப்பிடுபவன்,'' என்று சொல்லி சிரித்தார். பின்னர் செய்தியாளர்களுடன் இணைந்து வைகோ காலை உணவு சாப்பிட்டார்.

ஸ்டாலின் பாணியில்
நமக்கு நாமே பயணத்தின் போது ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு சென்னையில் மதிய விருந்து கொடுத்தார். அதே பாணியில் மதுரையில் பிரேக்பாஸ்ட் விருந்தளித்து செய்தியாளர்களை சந்தித்தார் வைகோ.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications