"பச்சை தலைப்பா கட்டு" வைகோ... தேர்தல் பிரசாரத்தில் திடீர் சபதம்
தூத்துக்குடி: விவசாயிகள் வாழ்வில் முன்னேற்றம் அடையும் வரை, தலையில் கட்டி இருக்கும் பச்சை துண்டை அவிழ்ப்பதில்லை என்று சபதம் ஏற்றுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் தங்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வைகோ வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் கூறுகையில், விவசாயிகள் வாழ்வில் முன்னேற்றம் அடையும் வரை, தலையில் கட்டி இருக்கும் பச்சை துண்டை அவிழ்ப்பதில்லை என்று சபதம் ஏற்றுள்ளேன். தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் சுகாதாரம் இல்லாமல் உள்ளன. தனியார் மறுத்தவமனையில் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். அதனால் ஏழை, எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பது இல்லை.
எங்கள் கூட்டணி வெற்றிபெற்றால், முதல்அமைச்சர் கூட தனியார் மருத்துவமனைக்கு போகக்கூடாது. அரசு மருத்துவமனைக்கு தான் போக வேண்டும் என்பது என்னுடைய கருத்து. நாங்கள் அந்த அளவுக்கு அரசு மருத்துவமனையின் தரத்தை மாற்றிக் காட்டுவோம். நானும் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெறுவேன்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் கடன்கள் ரத்து செய்யப்படும். நதி நீர் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும். வேலையில்லா பட்டதாரிகளுக்கு நிவாரண நிதி வழங்கப்படும். மத்திய அரசிடம் பேசி தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் நெருங்க விட மாட்டோம். வெளிநாட்டு நிறுவனங்கள் வியாபாரிகளை அழிக்க விட மாட்டோம்.
ஓட்டப்பிடாரம் என்றாலே வ.உ.சிதம்பரனாரை தான் குறிக்கும். அவருடைய மகன் வாலேசுவரன் தமிழகத்தில், சிறந்த ஆட்சி அமைய வேண்டும் என்று அவருடைய மகள் மரகத மீனாட்சியிடம் கூறியுள்ளார். ம.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று மரகத மீனாட்சி என்னிடம் கூறினார். கிராமங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட, மே 16-ந்தேதி தே.மு.தி.க. மக்கள் நல கூட்டணிக்கு தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு வைகோ பேசினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications