கலிங்கப்பட்டியில் உற்சாகமாக பொங்கல் கொண்டாடிய வைகோ
திருநெல்வேலி: மதிமுக பொதுச்செயலாளர் தனது தாய் கிராமமான கலிங்கப்பட்டியில் பொங்கல் பண்டிகையை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினார்.
களையும், பொதுமக்களையும் சந்தித்து பொங்கல் வாழ்த்துக் கூறினார். பின்பு வீட்டின் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் கழகத் தோழர்கள் அவருடன் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர்
நெல்லை மாவட்டத்தில் உள்ள கலிங்கபட்டி கிராமம் வைகோ அவர்களின் சொந்த கிராமமாகும்.

தை திருநாளை ஒட்டி கலிங்கபட்டிக்கு வந்திருந்த வைகோ வீதிகள் தோறும் கட்சிக்கொடி ஏற்றிவைத்தார்.
இதனைத்தொடர்ந்து அவரது வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறிய வைகோவிடம் ஏராளமான பொதுமக்கள் வந்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த விழாவில் மதிமுக உயர்நிலைக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.

அனைவருக்கும் பொங்கல்வாழ்த்துக்களை கூறிவிட்டு பேசிய வைகோ, தமிழர்களுக்கு மோடி தலைமையிலான அரசு துரோகம் இழைப்பதாக குற்றம் சாட்டினார்.
தமிழர்களுக்கு மோடி துரோகம் இழைப்பதால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டு அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

காவிரி உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், ஜனவரி 20ஆம் தேதி அன்று தஞ்சாவூரில் நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் திமுக சார்பில் டி.கே.எஸ் இளங்கோவன் பங்கேற்க உள்ளதாக தெரிவித்த வைகோ, மத்திய அரசுக்கு எதிராக ஆளும் அதிமுக அரசு ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது என்றார்.

அறிவுத்திறன் போட்டி
பொங்கல் விழாவின் தொடர்ச்சியாக இன்று கலிங்கப்பட்டியில், அரசு மேல்நிலைப்பள்ளியில் மதிமுக சார்பில் அறிவுத்திறன் போட்டி நடைபெற உள்ளது. திருக்குறள் ஒப்புவித்தல், சதுரங்கம், வினாடி வினா, பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications