தமிழ் மான உணர்வுச் சுடர் அணைந்தது- பா.ராமச்சந்திரன் ஆதித்தன் மறைவுக்கு வைகோ இரங்கல்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் தலைமகன், மாலை முரசு ஏட்டின் அதிபர் இராமச்சந்திர ஆதித்தனார் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாய் தாக்கியது. அதிர்ச்சியால் மனம் கலங்குகிறேன்.
தன் தந்தையாரைப் போலவே தமிழ் இனமான உணர்வு கொண்டவராக தமிழ் ஈழ விடுதலை உணர்வாளராகவே வாழ்ந்தார். தமிழர்கள் உரிமைக்காக, தமிழ் ஈழ விடியலுக்காக தனது மாலைமுரசு ஏட்டையும், தான் நடத்திய கதிரவன் பத்திரிகையையும் அர்ப்பணித்தார்.
பல ஆண்டுகளாக அவரது பரிவான நட்பைப் பெற்றிருந்தேன். நான் சந்திக்கும்போதெல்லாம் தமிழர் நலன், ஈழ விடியல் குறித்தே பேசுவார். மெர்க்கெண்டைல் வங்கியை மீட்கின்ற பணியில் அவர் ஈடுபட்டபோது, அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களிடமும், நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா அவர்களிடமும் நிலைமையை எடுத்துக் கூறி, அவரது கோரிக்கைகளை நான் நிறைவேற்றிக் கொடுத்ததற்காக எனது இல்லம் தேடி வந்து நன்றி கூறிய பண்பாளர் ஆவார்.
2008 ஆம் ஆண்டு கடைசியிலும், 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் கொடுந்துயர் வரையிலும் சிங்கள அரசு நடத்திய தமிழ் இனப் படுகொலையை நாள்தோறும் ஆதாரங்களுடன் விரிவாக மாலைமுரசு ஏட்டில் வெளியிட்டதனாலும், முத்துக்குமார் உள்ளிட்ட வீரத் தியாகிகளின் உயிர்கொடையை தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செய்திகளாக தனது மாலைமுரசு ஏட்டில் தந்ததனாலும், மத்திய அரசு பல வகையிலும் நெருக்கடி கொடுத்து மிரட்டியபோதும், அதற்கு சற்றும் அஞ்சாது, தலைவணங்காது நீதிக்காகவும், தமிழர் உரிமைக்காகவும் மாலைமுரசு பத்திரிகையை காண்டீபம் என ஏந்திய வீரமிக்க பெருந்தகையாளர்தான் இராமச்சந்திர ஆதித்தனார் அவர்கள் ஆவார்கள்.
துன்பப்படுகின்றவர்வகளுக்கு உதவுகின்ற இரக்க சுபாவம் மிக்கவர். அன்னாரது இளவலான சிவந்தி ஆதித்தனார் அவர்கள் மறைந்த ஆறு மாத காலத்திற்குள் இராமச்சந்திர ஆதித்தனாரும் மறைந்த துக்கம் பத்திரிகை உலகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகிவிட்டது.
அவரது மறைவால் துயரத்தில் துடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், மாலைமுரசு ஏட்டின் செய்தியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications