நெருப்போடு விளையாடாதீர்கள்.. சித்தராமையாவுக்கு வைகோ எச்சரிக்கை
புதுக்கோட்டை: கர்நாடகத்தில் தமிழக இளைஞர் மீது விழுந்த ஒவ்வொரு அடியும், தேசிய ஒருமைப்பாட்டிற்கே குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது. நெருப்போடு விளையாட வேண்டாம் என்று கர்நாடக முதல்வரை நான் எச்சரிக்க விரும்புகிறேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
புதுக்கோட்டைக்கு வந்த வைகோ அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு மத்திய அரசு பக்கபலமாக உள்ளது. வெளிப்படையாக அனுமதி அளிக்காவிட்டாலும் அணை கட்டுப்படுவது உறுதியாகிவிடட்து.
கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்புபடி 15ஆயிரம் கனஅடி நீர் அளிக்காhமல் கண்துடைப்பிற்காக தற்போது அணையை திறந்து விட்டுள்ளனர். கர்நாடகாவில் மாநிலம் தழுவிய பந்திற்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது என்ற போர்வையில்; கர்நாடகா மாநில அரசே மறைமுகமாக பந்தை நடத்தியது. இதில் தமிழக முதல்வரரின் உருவபொம்மையை எரித்து பாடை கட்டி போராட்டம் நடத்தியது கண்டனத்திற்கு உரியது.
மத்திய அரசையும் தமிழக அரசையும் கர்நாடாக அரசு ஏமாற்றி வருகிறது. கர்நாடாகவில் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக தான் அரசியல் லாபத்திற்காக மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசம் தற்போது ஆண்டு வரும் பாஜக அரசம் காவிரி மேலாண்மை வாரரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
கேரளம் ஒருபக்கத்தில் வஞ்சிக்கிறது. கர்நாடகம் மறு பக்கத்தில் வஞ்சிக்கிறது. ஆந்திரம் வஞ்சிக்கிறது. சிங்கள அரசு மீனவர்களை வஞ்சிக்கிறது. தமிழக முதல்வர் முல்லை பெரியார் பிரச்னையிலும் காவிரி பிரச்னையிலும் முறையாக உச்சநீதிமன்றத்தை அணுகி முறையான நடவடிக்கை எடுத்தார் என்பது யாரும் மறுக்க முடியாது. ஆனால் இன்றைக்கு உள்ள நிலையில் கர்நாடகம் ஒட்டுமொத்தமாக ஓரணியில் உள்ளது என்பதை அவர்கள் வெளிப்படுத்தி விட்டார்கள்.
ஆனால் தமிழகம் பிளவுபட்டுள்ளது என்பது போன்ற மாய தோற்றத்தை ஏற்;படுத்தி விட்டார்கள். எனவே தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டதத்தை நடத்தி ஒரு முடிவு எடுத்து பிரதமரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறுவது பிரதமர் நியாயமாக நடந்து கொள்வார் என்பதற்காக அல்ல எதிரும் புதிருமாக உள்ள அதிமுக திமுக கட்சிகள் ஓரணியில் உள்ளது என்பதை நிருபிப்பதற்காக தான்.
தொடர்ந்து கர்நாடகம் முறைதவறி நடக்கிறது. தமிழகம் பொறுமையாக உள்ளது. பொறுமைக்கும் எல்லை உள்ளது. தமிழகத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் பதிவு செய்த தமிழ்; இளைஞர் ஒருவர் கர்நாடகாவில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் கண்டனத்திற்கு உரியது. கர்நாடகா முதல்வர் நெருப்போடு விளையாடுகிறார். அங்குள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது கர்நாடக அரசம் மத்திய அரசும் தான். அந்த இளைஞர் மீது விழுந்த ஒவ்வொரு அடியுமம் தேசிய ஒருமைபாட்டிற்கே குந்தகம் விளைவிக்கும் செயலாக உள்ளது என்று வைகோ கூறியுள்ளார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications