நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு நடைப்பயணம்.. 31ஆம் தேதி தொடங்குகிறார் வைகோ!
நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு நடைப்பயணத்தை வைகோ வரும் 31ஆம் தேதி தொடங்கவுள்ளார்.
Recommended Video

சென்னை: நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு நடைப்பயணத்தை வைகோ வரும் 31ஆம் தேதி தொடங்கவுள்ளார்.
தேனி மாவட்டம், தேவாரம் அருகே பொட்டிப்புரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் சுமார் ரூ.1,500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது.
அம்பரப்பர் மலையைக் குடைந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

நியூட்ரினோவுக்கு அனுமதி
இந்நிலையில் தேனியில் நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மக்களின் வாழ்வாதாரம், நிலத்தடி நீர் பாதிக்கப்படாது என்று சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக்குழு பரிந்துரைத்ததன் பேரில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

31ஆம் தேதி நடைபயணம்
நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு நடைப்பயணத்தை மதுரையில் வரும் 31ஆம் தேதி வைகோ தொடங்கவுள்ளார்.

கொடியசைக்கிறார் ஸ்டாலின்
மதுரை பழங்காநத்தத்தில் வைகோவின் விழிப்புணர்வு நடைப்பயணத்தை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மதுரையில் இருந்து கம்பம் வரை 10 நாட்களுக்கு வைகோ நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

30 நாட்களுக்குள்
இதனிடையே நியூட்ரினோ திட்ட அனுமதிக்கு எதிர்ப்பு இருந்தால் 30 நாட்களுக்குள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகலாம் என்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியுள்ளது.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications