For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலைமைச் செயலாளரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.. வைகோ

வருமான வரிச் சோதனையில் சிக்கியுள்ள தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக தலைமைச் செயலாளரான ராம மோகன் ராவின் வீட்டில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்ட வருமான வரித்துறை அதிகாரிகள்,பல கோடி ரூபாய் மதிப்புள்ள கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து ராம மோகன் ராவைவும், அவரது மகனையும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ராம மோகன் ராவை தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Vaiko demand to dismiss TN Chief Secretary

ராம மோகன் ராவிடம் இருந்து தலைமைச் செயலாளர் பதவியை பறிக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ராம மோகன் ராவ் மீது சட்டம் தனது கடமையை செய்ய வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

English summary
Vaiko urged state government immediate dismiss Tamil Nadu chief secretary Rama mohan rao.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X