திருப்போரூரில் புதிய மின் இணைப்பு: தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"மத்திய தொல்லியல் துறையின் 2010 ஆம் ஆண்டு மக்கள் விரோதச் சட்டத்தால், திருப்போரூர், மாமல்லபுரம், உத்திரமேரூர், காஞ்சிபுரம், பல்லாவரம் பகுதியில் வாழும் மக்கள் புதிய மின் இணைப்புகள் பெற முடியாமல், தங்கள் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதனால் மக்கள் வாழ்வுரிமை மீட்புக்குழுவை உருவாக்கி, மத்திய தொல்லியல் துறையை எதிர்த்து பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தனர். ம.தி.மு.க.வும், இப்போராட்டங்களில் பங்கு ஏற்றது.
ம.தி.மு.க. சார்பில், திருப்போரூர் பேரூராட்சி மன்றத் தலைவர் சக்தீஷ்வரி சிவராமன், துணைத்தலைவர் சசிகலா லோகு ஆகியோர் போராட்டக் குழுவினருடன் தலைநகர் டெல்லி சென்று, தொல்லியல் துறை அமைச்சர் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளைச் சந்தித்து, பாதிப்புகளை விளக்கி கோரிக்கை மனுவை வழங்கினார்கள்.
‘விரைவில் உங்கள் பிரச்னைகள் தீரும்' என்று மக்கள் பிரதிநிதிகளிடம் உத்தரவாதம் வழங்கியதன் அடிப்படையில், கடந்த 28.8.2013 அன்று புதிய மின் இணைப்பு பெறுவதற்கான தொல்லியல் துறையின் ஆட்சேபனையை விலக்கிக் கொள்வதாக, தொல்லியல் துறையின் தென்மண்டலக் கண்காணிப்பாளர், திருப்போரூர் உதவி மின் பொறியாளருக்குக் கடிதம் அனுப்பி உள்ளார்.
தொடர்ந்து 2.9.2013 அன்று தமிழ்நாடு பேரூராட்சி இயக்குனருக்கும், 23.9.2013 அன்று தலைவர், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், மத்திய அரசின் தொல்லியல் துறையின் தென் மண்டல கண்காணிப்பாளருக்கும் கடிதம் எழுதி உள்ளதை மக்கள் வரவேற்று மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு தங்கள் வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.
இந்நிலையில், மக்கள் போராடிப் பெற்ற வெற்றியைத் தடுக்கின்ற விதத்தில், மத்திய அரசின் கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருவதால், இரண்டு மாதங்கள் ஆகியும் புதிய மின் இணைப்பு பெற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், மாநில அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது.
எனவே, மத்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கண்காணிப்பாளரின் நடைமுறை கடிதத்தின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்து, புதிய மின் இணைப்பு வழங்கிட, தமிழக அரசு ஆவன செய்திட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி












Click it and Unblock the Notifications