மக்கள் நலக் கூட்டணி கலைப்பு? வைகோவின் ஃபேஸ்புக் பதிவால் பரபரப்பு
சென்னை: மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி விலகுவதாக அறிவித்த பரபரப்பு அடங்குவதற்குள் மக்கள் நலக் கூட்டணியே கலைக்கப்பட்டுவிட்டதா? என்ற சந்தேகத்தை எழுப்பும் வகையில் மதிமுக பொதுச்செயலர் வைகோவின் ஃபேஸ்புக் பதிவு இடம்பெற்றுள்ளது.
சட்டசபை தேர்தலில் டெபாசிட்டை பறிகொடுத்ததால் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து கட்சிகள் சிதறி தப்பி ஓடிக் கொண்டிருக்கின்றன. தேமுதிக, தமாகா, தமிழர் முன்னேற்றப் படை என அடுத்தடுத்து கட்சிகள் விலகி வருகின்றன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கூட திமுக திசையை நோக்கி திரும்பிக் கொண்டிருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போதைய அரசியல் நிலவரம், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவை குறித்து மதிமுக தலைமையகமான தாயகத்தில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இடதுசாரி தலைவர்கள் ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து வைகோ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகமான தாயகத்தில் "மக்கள் நலக் கூட்டியக்க கூட்டம்" நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டு படத்தை வெளியிட்டிருக்கிறார்.
இந்தப் பதிவால் மக்கள் நலக் கூட்டணி என்பதையே அடியோடு கலைத்துவிட்டு இனி மக்கள் நலக் கூட்டியக்கமாக மட்டுமே செயல்படுவது என முடிவெடுத்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications