மது இல்லாத மாநிலம் உருவாக எங்களுக்கு வாக்களியுங்கள் : வைகோ
சங்கரன்கோவில்: தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு மது இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாகிட வேண்டும் என மதிமுக தலைவர் வைகோ தெரிவித்தார்.
தென்காசி லோக்சபா தொகுதி மதிமுக வேட்பாளர் டாக்டர் சதன் திருமலைக்குமாரை ஆதரித்து திருநெல்வேலி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை மதிமுக தலைவர் வைகோ பேசியதாவது:

தமிழகர்களுக்கு துரோகம்
இந்தியாவை ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் அரசு தொடர்ந்து தமிழகத்திற்கும் தமிழினத்திற்கும் துரோகம் செய்து வருகிறது. தமிழர்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு தமிழின விரோதத்துடன் இலங்கைக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

அதிமுக, திமுகவை புறக்கணியுங்கள்
இலட்சக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்த இலங்கைக்கு துணைபோகும் மத்திய காங்கிரஸ் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த திமுக ஆகிய இரு கட்சிகளையும் வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும்.

மது இல்லாத மாநிலம்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும் என பட்டி தொட்டிகள் எல்லாம் நடந்தேன். அப்போது தாய்மார்கள் மது எனும் அரக்கனை தமிழ்நாட்டிலிருந்து விரட்ட வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினர். மதுவால் தமிழகம் கெட்டு விட்டது. மது இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாகிட வேண்டும்.

பம்பரம் சின்னத்தில் வாக்கு
தென்காசி லோக்சபா தொகுதியில் ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் டாக்டர் சதன் திருமலைக்குமார் எளிமையானவர், ஜாதி மதம் பாராமல் அனைவரையும் அன்போடு அணைத்து செல்வார், அவருக்கு பம்பரம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன் என்றார் வைகோ.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications