Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேமுதிக வாகனம் மோதி விபத்து: காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்த வைகோ

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: தேமுதிக மாநாட்டிற்கு சென்ற வாகனம் மோதி காயமடைந்தவர்களை தனது காரில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர்.

இன்று காலை சுமார் 10 மணியளவில் மதுரை மாவட்டம் சிகரக்கோட்டை அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் மீது தேமுதிக மாநாட்டிற்கு கலந்து கொள்ளச் சென்றவர்கள் பயணம் செய்த வாகனம் மோதியுள்ளது.

விபத்தால் தலையில் காயமடைந்தனர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்கள். ஆனால், விபத்தை ஏற்படுத்திய வாகனம் அடிபட்டவர்களைக் கவனிக்காமல் நிற்காமல் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

காரில் பயணம்....

காரில் பயணம்....

இதற்கிடையே இன்று காலை தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியிலிருந்து திருமணம் ஒன்றிற்காக திண்டுக்கல்லுக்கு காரில் சென்று கொண்டிருந்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

உடனடி சிகிச்சை...

உடனடி சிகிச்சை...

அப்போது சிவரக் கோட்டை என்னும் இடத்தில் சாலையில் மக்கள் கூட்டமாக நின்றிருந்ததை கவனித்த வைகோ, தனது வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கி பார்த்துள்ளார். அங்கே, இருநபர்கள் தலையில் அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட ஆபத்தான நிலையில் கீழே கிடந்ததைக் கண்டு பதறிய வைகோ உடனடியாக அவர்களைத் தன்னுடன் வந்த வாகனங்களில் ஏற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார்.

தேமுதிக வாகனம்....

தேமுதிக வாகனம்....

வைகோ இதுபற்றி விசாரித்த போது, தேமுதிக மாநாட்டிற்கு சென்ற வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு அவர்கள் நிற்காமல் சென்று விட்டதும், இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்கள் பெயர் தண்டித் தேவர் மற்றும் விஜயகுமார் என்பதும் தெரிய வந்துள்ளது.

உறவினர்களுக்குத் தகவல்....

உறவினர்களுக்குத் தகவல்....

அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் பணியிலிருந்த மருத்துவர் அருள் ராஜ்குமாரிடம் விபத்தில் அடிபட்டவர்களை நன்கு கவனித்து கொள்ளுமாறு கூறிவிட்டு, விபத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார் வைகோ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+