முல்லைப் பெரியாறு போராட்டம் கைகொடுக்கும் நம்பிக்கை.. தேனிக்கு மாறுகிறார் வைகோ?
தேனி: லோக்சபா தேர்தலில் மதிமுக பொதுச்செயலர் வைகோ இம்முறை தேனி தொகுதியில் போட்டியிடக் கூடும் எனக் கூறப்படுகிறது. வைகோ போட்டியிடுவதாக கூறப்படும் விருதுநகர் தொகுதியில் "அகிலன்" சினிமா தயாரிப்பாளர் டாக்டர் சரவணனை வேட்பாளராக மதிமுக நிறுத்தக் கூடும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலில் பாஜக அணியில் இடம்பெற்றுள்ளது மதிமுக. விருதுநகர், ஈரோடு உள்ளிட்ட 8 தொகுதிகளில் மதிமுக போட்டியிடும் என்றும் கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விருதுநகர் தொகுதியை கைவிட்டு தேனி தொகுதியில் வைகோ போட்டியிடக் கூடும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தொடர்ச்சியான போராட்டங்களை மதிமுக நடத்தியது. முல்லைப் பெரியாறு அணைக்காக தொடர்ந்தும் வைகோ தலைமையில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதை அடிப்படையாகக் கொண்டு தேனி தொகுதியில் முக்கிய விவசாய சங்கங்கள், வர்த்தகர் சங்கங்கள் மற்றும் பொதுமக்களிடம் மதிமுக நிர்வாகிகள் ஒரு கருத்து கணிப்பை நடத்தி உள்ளனர். அதில் வைகோ, தேனி தொகுதியில் நின்றால் முழு ஆதரவு கிடைக்கும் எனத் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தேனி தொகுதியில் மதிமுக பொதுச்செயலர் போட்டியிட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
விருதுநகரில் டாக்டர் சரவணன்?
அத்துடன் விருதுநகர் லோக்சபா தொகுதியில் "அகிலன்" திரைப்படத்தை தயாரித்து நடித்த டாக்டர் சரவணன், மதிமுக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளராக பார்த்திபனும் திமுக வேட்பாளராக பொன். முத்துராமலிங்கமும் போட்டியிடுகின்றனர். வைகோவுடன் திமுகவை விட்டு வெளியேறி மீண்டும் திமுகவில் இணைந்தவர் பொன். முத்துராமலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications