சுர்ஜித் சிங் பர்னாலா மறைவுக்கு வைகோ இரங்கல்
தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா நேற்று காலாமானார். அவரது மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
சண்டிகர்: தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உடல் நலக்குறைவால் சண்டிகர் மருத்துவமனையில் நேற்று காலாமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தமிழக முன்னாள் கவர்னருமான சுர்ஜித் சிங் பர்னாலா கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக அவர் சண்டிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார்.

அவரது மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் பஞ்சாப் மாநிலத்தில் அகாலிதளம் கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவரும், மத்திய அமைச்சர் மற்றும் தமிழக ஆளுநராகப் பொறுப்பு வகித்தவருமான, எனது மதிப்பிற்குரிய சுர்ஜித்சிங் பர்னாலா இயற்கை எய்திய செய்தி அறிந்து வேதனை அடைந்தேன்.
பல ஆண்டுகள் அவருடன் நேடியாகப் பழகி இருக்கின்றேன். ஒரு கட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தில் அகாலி தளம் ஆட்சி கலைக்கப்பட்டபோது, மாநிலங்கள் அவையில் அகாலி தளம் கட்சியின் உறுப்பினர் குர்சரண்சிங் தோரா அவையில் கலந்து கொள்ளாத நிலையில், தன்னந்தனியனாகக் காங்கிரஸ் அரசைக் கடுமையாக விமர்சித்து, சபையை நடக்க விடாமல் செய்தேன்.
மறுநாள் வெளியான ஆங்கில ஏடுகள் இந்தச் செய்தியை வெளியிட்டன. அன்று மாலை கபூர்தலா மாளிகையில் நான் அகாலி தளம் தலைவர்களைச் சந்தித்தபோது, என்னைக் கட்டித் தழுவிப் பாராட்டியவர் சுர்ஜித் சிங் பர்னாலா ஆவார்கள்.
1998 நவம்பர் 19 ஆம் தேதி என் மகன் துரை வையாபுரியின் திருமணம் சென்னை காமராசர் அரங்கில் நடைபெற்றது, அன்றைய மத்திய இராணுவ அமைச்சரும் எனது ஆருயிர்ச் சகோதரருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஒரு சிறிய விமானத்தை ஏற்பாடு செய்து, தன்னோடு 5 மத்திய அமைச்சர்களைத் திருமணத்திற்கு அழைத்து வந்தார். அவர்களுள் ஒருவர் சுர்ஜித் சிங் பர்னாலா.
அதிர்ந்து பேச மாட்டார். மிக மென்மையாகப் பேசுவார். இனிமையாகப் பழகக் கூடியவர். அவரது மறைவுச்செய்தி என்னை மிகவும் பாதித்தது. அன்னாரது குடும்பத்தாருக்கும், சகாக்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்." என வைகோ தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications