வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக்கூடாது: வைகோ
மதுரை: ''தமிழர்களின் பண்பாட்டோடு, வாழ்வோடு, உணர்வோடு, வீரத்தோடு கலந்தது ஜல்லிக்கட்டு. அதற்கு தடை விதிக்கக்கூடாது,'' என ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் தயாராகி வருகிறது. இந்த நாளில் ஜல்லிக்கட்டு, ஆட்டு சண்டை, சேவல் சண்டை போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகள் தென் தமிழகத்தில் நடைபெறுவது வழக்கம்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதுரையில் சேவல்சண்டைக்கு தயராகும் சேவல்களையும், ஆட்டுச் சண்டைக்கு தயாராகும் ஆடுகளையும், தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் ஜல்லிக்கடு மாடுகளை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு, எருது, மஞ்சு விரட்டு போன்றவை தமிழர்களின் பண்பாட்டோடு கலந்தவை. தமிழர்களால் பாரம்பரியமாக கொண்டாடப்படும் வீர விளையாட்டுக்கள்.

இது ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டாக உள்ளது. அங்கு சிலர் எருதுகளை ஈட்டியால் குத்தி கொன்று விடுகின்றனர். அது போன்ற கொடூரம் இங்கில்லை. இங்கு தார் குச்சியை வைத்து கூட காளைகளை குத்துவது கிடையாது.
தமிழகத்தை பொறுத்தமட்டில் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி ஆரோக்கியமாகவே ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. எனவே ஜல்லிக்கட்டு நடத்த மாநில அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்து அனுமதி பெற வேண்டும். இதனை சம்பந்தப்பட்டவர்கள் ஆராய்ந்து நல்ல பதில் கொடுக்க வேண்டும். இந்த ஆண்டும் வழக்கம் போல் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications