உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, திமுகவுடன் மக்கள் நலக் கூட்டணி இணைந்து போட்டியிடாது - வைகோ அறிவிப்பு
சென்னை: வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜகவுடன் மக்கள் நலக் கூட்டணி இணைந்து போட்டியிடாது என அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறினார்.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் 17, 19-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் நேற்று அறிவித்தார். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

அந்தவகையில் 12 மாநகராட்சிகள், நகராட்சிகள் வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை அறிவித்துள்ளது. சென்னையில், பாலகங்கா, ஜேசிடி பிரபாகரன், ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி வேட்பாளர் பட்டியலை தொடர்ந்து ஊராட்சிகளுக்கான வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் அதிமுக தலைமை அறிவித்தது.
இந்நிலையில் மக்கள் நலக் கூட்டணியின் ஆலோசனை கூட்டம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு எதிர்க் கட்சிகளுக்கு அவகாசம் தரவில்லை. தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெறாமல் தடுக்க மாநில தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜகவுடன் மக்கள் நலக் கூட்டணி இணைந்து போட்டியிடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் கர்நாடக மேலவை, சட்டப்பேரவை தீர்மானங்கள் இந்தியாவின் இறையாண்மையை கேள்விக்குறியாக்கிவிட்டன. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாத நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி இணைந்து தேர்தலில் போட்டியிட்டது நினைவு கூறத்தக்கது.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications