இனி ஒரு முறை நான் தோற்க மாட்டேன்... மா.செக்களைக் குஷிப்படுத்திய வைகோ பேச்சு
சென்னை: இனி ஒருபோதும் தோற்க மாட்டேன். இனி நமக்கு அனைத்திலும் வெற்றி தான் என்று மதிமுக மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளிடம் உற்சாகமாகக் கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
மதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள், ஆட்சி மன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்று அறிவிக்கப்பட்டது.

பொருளாளர் மாசிலாமணி, ஆட்சி மன்றக் குழு செயலாளர் அ.கணேசமூர்த்தி எம்.பி., உயர்நிலைக்குழு உறுப்பினர் இமயம் ஜெபராஜ், சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் செவந்தியப்பன் ஆகியோரைக் கொண்ட குழு முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்தக் குழுவில் டாக்டர் சதன் திருமலைக்குமாரும் சேர்க்கப்பட்டார்.
இக்கூட்டத்தில் வைகோ பேசுகையில்,
வாஜ்பாய் காலத்திலிருந்தே நாம் பா.ஜ.க.வுடன் அனுசரணையாக இருந்து வருகிறோம். இப்போது நாம் பா.ஜ.க. கூட்டணியில் இருக்கிறோம். வேறு யாரெல்லாம் இந்தக் கூட்டணிக்கு வரப் போகி றார்கள் என்பது பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.
தேர்தல் வந்துவிட்டாலே நான் தூங்க மாட்டேன். சொந்தக் கட்சி வேட்பாளர்களுக்கு உழைத்ததை விட, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்குத்தான் கடந்த காலங்களில் அதிகம் உழைத்திருக்கின்றேன்.
இனி ஒருமுறை நான் தோற்க மாட்டேன். இனி நமக்கு தோல்வி என்பதே இல்லை; அனைத்திலும் வெற்றிதான் என்று பேசினாராம் வைகோ.












Click it and Unblock the Notifications