என் மகன் உள்பட குடும்பத்தினர் யாரும அரசியலுக்கு வரமாட்டார்கள்... வைகோ உறுதி
சென்னை : தனது மகன் உள்பட குடும்பத்தினர் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
வைகோ நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது...

ம.தி.மு.க.,வில் இருந்து விலகி, சிலர் தி.மு.க.,வுக்கு சென்றுள்ளனர்; அவர்கள், பதவிக்காகவே சென்றுள்ளனர். அதற்கு ஏற்றார் போல, ம.தி.மு.க.,வில், மாநில செயலாளர்களாக இருந்த தாமரைக்கண்ணனுக்கு, சேலம் தொகுதியிலும், பாலவாக்கம் சோமுவுக்கு, காஞ்சிபுரம் தொகுதியிலும், 'சீட்' கொடுப்பதாக உறுதியளித்து உள்ளனர்.
நான் ஒரு போதும் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை. மத்திய அமைச்சராகும் வாய்ப்பு எனக்கு கிடைத்த போது, அந்த பதவியை, கட்சியின் பொருளாளராக இருந்த கண்ணப்பனுக்கும், துணை பொதுச் செயலராக இருந்த செஞ்சி ராமச்சந்திரனுக்கும் வாங்கிக் கொடுத்தேன். சிப்பிப்பாறை ரவிச்சந்திரனை எம்.பி.,யாக்கினேன்.
ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவன் நான். என் மகன் உட்பட, குடும்பத்தினர் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள். தமிழகத்தில், அனைத்து கட்சிகளையும் சேர்த்து, மொத்தம், 35 சதவீத ஓட்டுகள் தான் உள்ளன.
மீதமுள்ள, 65 சதவீதம் பேர், நடுநிலையாளர்கள்; அவர்கள், ம.தி.மு.க.,வுக்கு வாக்களிப்பார்கள். அதனால், வரும் சட்டமன்ற தேர்தலில் நல்ல மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications