சோஷியல் மீடியா எங்களைப் பற்றி நல்லாவே பேசுது.. வைகோ ஹேப்பி
திருப்பூர்: திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக மக்கள்நலக்கூட்டணி உருவாகியிருப்பதாகவும், சமூக வலைதளங்கள் மற்றும் இளைய தலைமுறையினர்களிடையே இந்தக் கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் மதிமுக கட்சியின் கொங்குமண்டல மாநாடு இன்று நடைபெறுகிறது. இதற்காக திருப்பூர் வந்த வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-
திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக மக்கள்நலக்கூட்டணி உருவாகியுள்ளது. சமூக வலைதளங்கள் மற்றும் இளைய தலைமுறையினர்களிடையே மக்கள் நலக்கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உருவாகியுள்ளது.
மத்திய அரசிடம் நிலவி வந்த சகிப்புத்தன்மையின்மை, தற்போது தமிழக அரசிடம் நிலவிவருகிறது. வெள்ளபாதிப்பு குறித்த உண்மைச் செய்தியை .வெளியிட்ட ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டதே சகிப்புத்தன்மையின்மைக்கு எடுத்துக்காட்டு.
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.
ஊழல் மற்றும் மது இவை இரண்டாலும் திமுக , அதிமுக மக்கள் எதிர்ப்பை பெற்றுள்ளன..அதனால் மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்காக மக்கள் நலக்கூட்டணி செயல்திட்டங்களை உருவாக்கி செயலாற்றி வருகின்றோம். தவறுகளுக்கு இடம் கொடுக்காத கூட்டணி ஆட்சியை ஏற்படுத்த மக்கள் விரும்புகிறார்கள்.
சகாயம் அறிக்கையில் திமுக அதிமுக இரண்டும் மவுனம் சாதிக்கிறது" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications