விஜயகாந்தும், வாசனும் எங்கள் கூட்டணியில் கைகோர்ப்பார்கள் - வைகோ நம்பிக்கை
சென்னை: வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் மற்றும் தமாகா தலைவர் வாசன் எங்கள் கூட்டணியில் இணைவார்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை, எம்.ஜி.ஆர்.நகர் சூளைப்பள்ளம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் நலக் கூட்டியக்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் பங்கேற்று வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "மழை வெள்ளத்தால் சிறு, குறு தொழில் செய்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் தொழில் தொடங்கவும், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமாகா தலைவர் வாசன் ஆகியோர் மக்கள் நலக் கூட்டியக்கத்தில் கைகோர்க்க வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். அந்த வேண்டுகோளுக்கு அவர்கள் மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்துள்ளார்கள்.
மக்கள் நலக் கூட்டணி கொள்கை உள்ள கூட்டணி என்று விஜயகாந்த் கூறியுள்ளார். அவர்கள் இருவரும் எங்கள் கூட்டணியில் இணைவார்கள் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications