ராம்குமார் மர்ம மரணம்- நீதி விசாரணை நடத்த வைகோ வலியுறுத்தல்
சென்னை: சுவாதி கொலை வழக்கில் விசாரணை கைதியான ராம்குமார் சிறையில் உயிரிழந்தது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை, நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் கடந்த ஜூன் 24 ஆம் தேதி காலை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட இளம் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார் என்று சிறைத்துறையினர் கூறுவது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அன்று தற்கொலை முயற்சி
நெல்லை மாவட்டத்தில் உள்ள அவருடைய சொந்த ஊரில் ஜூலை 1 ஆம் தேதி நள்ளிரவில் காவல்துறையினர் ராம்குமாரை கைது செய்த போதே, கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. நாட்டையே உலுக்கிய சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி என்று கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் தக்க பாதுகாப்புடன்தான் அடைக்கப்பட்டிருக்க வேண்டும்.

பாதுகாப்பே இல்லையா?
ராம்குமார் சிறையின் உள்ளே கட்டுக்காவல்களை மீறி, சமையல் அறைக்குச் சென்று மின் கம்பியை கடித்து, தன் உடலில் தானே மின்சாரத்தைப் பாய்ச்சி தற்கொலைக்கு முயன்றார் என்று கூறப்படுவது நம்பும் படியாக இல்லை. அப்படி எனில் புழல் சிறையில் கண்காணிப்புகள் இல்லாமல்தான் கைதிகள் இருக்கின்றனரா?

வேடிக்கை பார்த்தனரா?
சிறைக் கைதி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் வரை காவலர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்களா? சிறையில் நடந்த இந்தச் செயலுக்கு சிறைத்துறை அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும்.

நீதி விசாரணை
ஒரு முக்கியமான கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் சிறையில் தற்சொலை செய்து கொண்டார் என்று அரசு தரப்பில் கூறப்படுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. சுவாதி கொலை வழக்கின் பின்னணி குறித்தும், சிறையில் ராம்குமார் தற்கொலை குறித்தும், உயர்நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதியைக் கொண்டு முழு விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications