ஆட்சிக்கு வந்தால் ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்வோம்- அணு உலைகளை அகற்றுவோம்: வைகோ
மாமண்டூர்: மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக- தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் லோக் ஆயுக்தா சட்டத்தைக் கொண்டு வருவோம்; ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்வோம் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ உறுதியளித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் நடைபெற்ற மக்கள் நலக்கூட்டணி- தேமுதிக மாநாட்டில் வைகோ பேசியதாவது:
தமிழகத்தில் ஊழல் மலிந்து போய்விட்டது. தமிழக விளைநிலங்கள் தரிசுநிலங்களாகிவிட்டன. ஸ்பெக்ட்ரம் ஊழல் பணப்பரிவர்த்தனையில் ஸ்டாலின் பயனடைந்தார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் பலிகடாவாக்கப்பட்டார் கனிமொழி. நாங்கள் ஆட்சிக்கு வருவோம்.. லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வருவோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக் கடன்களை அரசே ஏற்கும். நாங்கள் ஆட்சிக்கு வரும்போது தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும். மதுவிலக்கு என ஜெ.வும் கருணாநிதியும் சொல்வது ஊரை ஏமாற்றத்தான்....
பீகாரில் நிதிஷ்குமார் செய்ததைப் போல நாங்கள் மதுவிலககி அமல்படுத்துவோம். மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தின் போது கலிங்கப்பட்டியில் என் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. அச்சம்பவம் என்னை சுட்டுக் கொல்ல சதியோ என்ற சந்தேகம் உள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வலியுறுத்துவோம். கர்நாடகாவை மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் கூடங்குளம் அணு உலைகள் அகற்றப்படும். மீத்தேன், பாறை எரிவாயு திட்டங்கள் அடித்து விரட்டப்படும். இலங்கை அகதிகளுக்கு தமிழகத்தில் வாழ்வு இல்லாத நிலை இருக்கிறது. இதனை மாற்றியமைப்போம்.
இவ்வாறு வைகோ கூறினார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications