புதிய ரூபாய் நோட்டு மூலம் அயோக்கியத்தனமாக இந்தியை திணிப்பதா? வைகோ கண்டனம்
புதிய ரூபாய் நோட்டில் இந்தி திணிக்கப்பட்டுள்ளதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: புதிய ரூபாய் நோட்டு மூலம் மத்திய அரசு இந்திய திணிப்பதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

500, 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தவுடன் முழுமையாக வரவேற்றவன் நான். மிக சதுர்யமாக கருப்பு பணத்தையும், ஊழலையும் ஒழிக்க எடுக்கப்பட்ட சாகசமான முயற்சியை பாராட்டுகிறேன் என கூறியிருந்தேன். இந்த திடீர் முடிவினால் சாதாரண மக்கள், நடுத்தர மக்கள், திருமணத்துக்காக சிறுக, சிறுக சேமித்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்.
பல இடங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் நடவடிக்கை முறையாக செயல்படவில்லை. ரூ.500 நோட்டு இன்னும் வரவில்லை. ரூ.2000 நோட்டுகள் தான் தருகின்றனர். இவற்றை முன்பே தயார் நிலையில் வைத்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும். பொதுமக்களுக்கு ஏற்பட்டு உள்ள சிரமத்தை உணர்ந்து கவலைப்படுகிறேன்.
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ள லட்சக்கணக்கான கோடிகள் பணத்தை கொண்டு வந்து நபருக்கு ரூ.15 லட்சம் தருவேன் என மோடி சொன்னது நடக்கவில்லை. இருந்தாலும் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்க நடவடிக்கை தான். ஆட்சி அதிகாரங்களை பயன்படுத்தி கள்ளத்தனமாக பணத்தை சேர்த்து வைத்தவர்களுக்கு வயிற்றில் புளியை கரைத்து இருக்கும். யாரும் நிம்மதியாக தூங்கி இருக்க முடியாது.
சந்தடி சாக்கில் அயோக்கியத்தனமாக இந்தியை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு இருப்பது சகிக்க முடியாதது. நல்ல நோக்கத்திற்காக செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டு இந்தியை திணிப்பதை கண்டிக்கிறேன். பன்முகத்தன்மையை சிதைக்கிற நோக்கில் ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications