பற்றி எரியும் பரபரப்புக்கு மத்தியில்.. மதுரை ஏர்போர்ட்டில் வைகோவை சந்தித்த தமிழிசை...!
மதுரை: மதுரை விமான நிலையத்தில் மதிமுக நிறுவனர் வைகோவும், தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுகவும் அங்கம் வகிக்கிறது. ஆனபோதும், தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் பிரதமர் மோடி குறித்து வைகோ கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த வாரம் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, ‘பிரதமரை ஒருமையில் பேசுவதை வைகோ நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அவர் தமிழகத்தில் எங்குமே பாதுகாப்பாக இருக்க முடியாது' என மிரட்டல் தொனியில் பேசியிருந்தார்.

எச்.ராஜாவின் இந்த பேச்சுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், மதுரையில் நேற்று 5 மாவட்ட பாஜகவின் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் மதுரை வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை, ‘வைகோ, ராமதாஸ் போன்றோர் எந்த பிரச்சனையானாலும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கலாமே தவிர எதிர்க்கட்சிபோல் தனிபட்ட முறையில் விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். கூட்டணி தர்மத்தை அவர்கள் காக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே, வைகோவுக்கு கண்டனம் தெரிவித்திருந்ததை தொடர்ந்து, எச்.ராஜாவின் வீட்டு முன்பு நேற்று போராட்டம் நடத்திய ம.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். .
இத்தொடர் சம்பவங்களால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக கூட்டணியிலிருந்து வைகோ வெளியேறப் போகிறார் என்ற யூகங்களும் உலா வந்தன. அவர் வெளியேற வேண்டும் என்று தமிழருவி மணியன் போன்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்
இந்நிலையில், நேற்று இரவு தமிழிசை சவுந்திரராஜன் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் சென்றார். அங்கு காத்திருப்போர் அறையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இருந்தார். இதைப் பார்த்த தமிழிசை, அவரது அருகே சென்று வணக்கம் தெரிவித்து சிறிது நேரம் பேசினார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை.
இருவரும் சுமார் 20 நிமிடம் வரை பேசிக்கொண்டு இருந்ததாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து இருவரும் ஒரே விமானத்தில் சென்னை கிளம்பி சென்றனர்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி












Click it and Unblock the Notifications