கைது பயம்: முன் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடும் வைகுண்டராஜன்?
சென்னை: வி.வி. மினரல்ஸ் நிறுவன அதிபர் வைகுண்டராஜன் முன்ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வைகுண்டராஜன் மீது 2012ம் ஆண்டு சி.பி.ஐ பதிவு செய்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்த சில தினங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து எந்த நேரத்திலும் அவர் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வைகுண்டராஜன். உச்ச நீதிமன்றத்தில் கதவை தட்ட உள்ளாராம்.
தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்புக்குழு தலைவராக 30.4.2007 முதல் 30.4.2012 வரை இருந்தவர் சுப்பையா. இவர் தாய் ஜானகி, சகோதரர் ஜெயராமன் ஆகியோருடன் சேர்ந்து ரூ.8 கோடியே 23 லட்சத்து 93 ஆயிரத்து 501 அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், இதற்கு விவி மினரல்ஸ் நிறுவன பங்கு தாரர்களான வைகுண்டராஜன், இவரது சகோதரர் ஜெகதீசன் ஆகியோர் உதவியதாகவும் சிபிஐயின் லஞ்ச ஒழிப்பு போலீசார் 2012ல் வழக்கு பதிவு செய்தனர்.

மணலில் பிரித்தெடுத்த தாதுக்களை தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்ப சுப்பையா அளித்த ஒத்துழைப்புக்கு லஞ்சமாக வைகுண்டராஜன் பல கோடிகளை கொடுத்தார் என்பது குற்றச்சாட்டு. இந்த வழக்கில் வைகுண்டராஜன் மற்றும் அவரது சகோதரர் ஜெகதீசன் உள்பட 8 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு விசாரணை நடத்தி வந்தது.
காரியாபட்டி அருகே இருந்த சுப்பையாவின் நிலத்தை வாங்க கொடுத்த விலையாக வைகுண்டராஜன் அதற்கு கணக்கு காட்டியுள்ளார். வங்கி செக் மூலமாக பரிவர்த்தனை நடந்ததால் சி.பி.ஐ சுலபமாக ஆவணங்களை திரட்ட முடிந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி, வைகுண்டராஜன், ஜெகதீசன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த வாரம் மனு செய்திருந்தனர். முன்ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்கவே மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக கூறப்படுகிறது. ஆனால் வைகுண்டராஜனுக்கு முன் ஜாமின் வழங்க உச்ச நீதிமன்றத்திலும் சி.பி.ஐ எதிர்ப்பு தெரிவிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications