கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை நினைத்து பார்க்க முடியவில்லை.. சமாதியில் பால் ஊற்றிய வைரமுத்து உருக்கம்
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து காலையிலேயே அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து காலையிலேயே பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மாலை சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே நேற்று மாலை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் காலை முதலே திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து கருணாநிதியின் நினைவிடத்தில் இன்று காலையில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பால் ஊற்றிய வைரமுத்து
வைரமுத்து தனது மகன்கள் மதன் கார்க்கி, கபிலனுடன் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பால் ஊற்றி, மலர் தூவி வைரமுத்து மரியாதை செலுத்தினார்.

தந்தைக்கு இறுதி கடமை
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து மகன் தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிக் கடமையாக சமாதியில் பால் ஊற்றி செல்கிறேன் என்றார்.

நினைத்து பார்க்க முடியவில்லை
மேலும் அவர் பேசியதாவது, கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை நினைத்து பார்க்க முடியவில்லை. கருணாநிதி எழுதி வைத்த உயிலான சமூக நீதியை காப்பாற்றுவது தமிழ் சமுதாயத்தின் கடமை.

விடியல் வருமா
சூரியன் இல்லாமல் விடியல் வருமா என்பதை போல உள்ளது கருணாநிதியின் மறைவு. கருணாநிதி இல்லாமல் தமிழகத்தில் வளர்ச்சியில்லை. இவ்வாறு வைரமுத்து உருக்கமாக பேசினார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications