மதுரை சின்னப்பிள்ளை காலில் விழுந்து வணங்கிய வாஜ்பாய்.. என்ன கூறினார் தெரியுமா?
Recommended Video

டெல்லி: கடந்த 2001-ம் ஆண்டு மத்திய சமூக மற்றும் பெண்கள் நலத்துறையின் சார்பாக நடைபெற்ற விருது விழாவில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய், சின்னப்பிள்ளை காலில் விழுந்து ஆசி பெற்ற சம்பவம் யாராலும் முடியாது.
சின்னப்பிள்ளை மதுரை மாவட்டம், அழகர் கோவில் சாலையில் உள்ள கள்ளந்திரி கிராமத்தில் பிறந்து, மதுரையிலிருந்து பன்னிரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பில்லுச்சேரி கிராமத்தில் வசித்து வருகிறார்.
பன்னிரெண்டு வயதில் சின்னப்பிள்ளைக்கும் பில்லுசேரிப் பெருமாளுக்கும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு ஆண் குழுந்தைகள் பிறந்தன.

சின்னப்பிள்ளை
ஆனால் கணவர் பெருமாள் தீராத நோயினால் வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினார். அப்போது தந்தையைம் இழந்த சின்னப்பிள்ளை கூலி வேலை செய்து குடும்பத்தையும் குழந்தைகளையும் காப்பாற்றினார்.

சுய உதவி குழுக்கள்
இந்நிலையில்தான் இன்றளவும் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருப்பினும், கிராமப்புற மகளிரிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி, களஞ்சியம் எனும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பொருளாதார நிலையை மேம்படுத்திக் காட்டினார் சின்னப்பிள்ளை.

ஸ்த்ரீ ஷக்தி புரஷ்கார் விருது
இதனால் தமிழகம் முழுக்க பிரபலமானார் சின்னப்பிள்ளை. இதைத்தொடர்ந்து கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி மத்திய சமூக மற்றும் பெண்கள் நலத்துறையின் சார்பாக நடைபெற்ற விருது விழாவில், ஸ்த்ரீ ஷக்தி புரஷ்கார் விருது சின்னப்பிள்ளைக்கு வழங்கப்பட்டது.

காலில் விழுந்த வாஜ்பாய்
இந்த விருதினை மாதா ஜிஜாபாய் பெயரால் மதுரையைச் சேர்ந்த களஞ்சியம் சின்னப்பிள்ளை அன்றைய பிரதமர் வாஜ்பாய் கைகளால் பெற்றார். மேடையில் விருதை வழங்கிய வாஜ்பாய் திடீரென அவரை உற்றுப்பார்த்தப்படியே தன்னைவிட இளையவரான சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

அதிர்ந்த அரங்கம்
இதனால் பதறிப்போன சின்னப்பிள்ளை, வாஜ்பாயின் கைகளை பற்றியதோடு அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். பிரதமரின் இந்த செயலால் கரகோஷத்தில் அதிர்ந்தது அரங்கம்.

ஷக்தியை பார்க்கிறேன்
இதைத்தொடர்ந்து மேடையில் பேசிய அப்போதைய பிரதமர் வாஜ்பாய், மதுரை சின்னப்பிள்ளையின் வடிவத்தில் நான் 'ஷக்தி'யைப் பார்க்கிறேன் என்றார். இதனால் தேசம் முழுவதும் பிரபலமானார் சின்னப்பிள்ளை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications