ஓட்டலில் திருட முயன்ற திருடர்கள் - தர்மஅடி கொடுத்து போலீசில் பிடித்துக் கொடுத்த வாலிபர்கள்
சேலம்: பேளூர் பகுதியில் ஓட்டலில் திருட முயற்சித்த 3 வாலிபர்களை அப்பகுதி மக்களே பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த பேளூரில் நேற்று இரவு மர்மநபர்கள் சிலர் பஸ்நிலைய பகுதிகளில் உள்ள ஓட்டலில் திருட முயற்சித்துள்ளனர். மர்மநபர்கள் நடமாட்டம் பற்றி தகவலறிந்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, அவர்களைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது சோளக்காட்டிலிருந்து மறைந்திருந்த கோவிந்தன் (25) என்ற வாலிபர் அவர்களிடம் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பேளூர் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் குமார், குமரேஷ் ஆகியோருடன் சேர்ந்து ஓட்டல்களில் திருட திட்டமிட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் அங்கிருந்த கோவிலில் கட்டி வைத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த வாழப்பாடி போலீசார், பொதுமக்களால் தாக்கப்பட்டு கட்டி வைக்கப்பட்டிருந்த 3 வாலிபர்களையும் மீட்டு விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட கோவிந்தன் ஏற்கனவே வேறொரு திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பது கண்டுபிடிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications