தொப்பியுடன் இருக்கும் வளர்மதி போட்டோஷாப் படம்.. சமூக வலைத்தளங்களில் வைரலானது
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தை பெற்றுள்ள சசிகலா தரப்பு தொப்பியுடனே வலம் வர தொடங்கியுள்ளது.
சென்னை: ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா தரப்புக்கு தேர்தல் ஆணையம் தொப்பி சின்னத்தை வழங்கியுள்ளது. இதனால் சசிகலா தரப்பு ஆதரவாளர்கள் தொப்பியுடனே திரிவது போன்ற போட்டோஷாப் போட்டோக்கள் வலம் வரத் தொடங்கியுள்ளன.
நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்த டிடிவி.தினகரன் தனது சின்னத்தை அடையாளப்படுத்தும் வகையில் தொப்பி அணிந்து வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் சசிகலாவின் தீவிர ஆதரவாளரமான வளர்மதி நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார்.

வெள்ளைநிற அதிமுக கரைபோட்ட புடவையை கட்டியிருந்த அவர் சிவப்பு நிற ஜாக்கெட்டுக்கு அணிந்து அமர்ந்திருந்தார். இந்நிலையில் அவர் ஜாக்கெட்டுக்கு மேட்சாக சிவப்பு நிற தொப்பி அணிந்து கொண்டு கூட்டத்தில் பங்கேற்றது போன்ற போட்டோ வெளியானது.
பழைய படங்களில் குதிரையில் செல்லும் வில்லன்கள் அணிவது போன்ற இருந்த அந்த தொப்பி வளர்அமதிக்கு கொஞ்சமும் சூட் ஆகவில்லை. இன்னும் என்னத்தெல்லாம் போடனுமோ என்று எண்ணுவதுபோல் இருந்தது அவர் உட்காந்திருந்த விதம். அவர் புடவையில் குத்தப்பட்டிருந்த பேட்ச்சிலும் தொப்பி சின்னமே இருந்தது.
இந்த போட்டோ வாட்ஸ் அப் பேஸ் புக் என அனைத்த சோஷியல் மீடியாக்களிலும் பரவியது. பின்னர் தான் தெரிந்தது வளர்மதி தலையில் போட்டிருந்த தொப்பி அவர் போட்டதல்ல. போட்டோ ஷாப்பில் வேலை பார்த்து போடப்பட்டுள்ளது என்று.
அச்சு அசலாக தொப்பி போட்டிருப்பது போன்றே போட்டோஷாப்பில் வேலை பார்க்கப்பட்டுள்ளது. இந்த போட்டோ தற்போது வேகமாக இன்டர்நெட்டில் பரவி வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications