'ஜல் ஜல்' சலங்கையுடன் களை கட்டியது வல்லநாடு ரேக்ளா ரேஸ்!
தூத்துக்குடி: ஜல்லிக்கட்டு நடத்த தடை நீங்கியுள்ள நிலையில் ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்த தென் மாவட்ட மக்கள் தயாராகி வருகின்றனர். 15ம் தேதி முதலில் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. 17ம் தேதி உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்த நிலையில் புகழ் பெற்ற வல்லநாட்டு ரேக்ளா ரேஸுக்கு அங்கு மக்கள் வெள்ளோட்டம் பார்த்து மகிழ்ந்தனர்.
மதுரை மாவட்டத்தில் பாலமேட்டிலும், புகழ்பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுக்கு தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 16ம் தேதி பாலமேட்டிலும், 17ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அதற்கு முன்பாக 15ம் தேதி மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும். இதுதான் பொங்கல் விழாவின்போது முதலில் நடைபெறும் ஜல்லிக்கட்டாகும்.

இதேபோல நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் ரேக்ளா ரேஸ் வெகு பிரபலம். கோயில் திருவிழா நாளானறு கடைசி நாளில் ரேக்ளா ரேஸ் நடத்தப்படுவது வழக்கம். இதில் நெல்லை, தூததுக்குடி மட்டுமின்றி தேனி, கம்பம், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ரேக்ளா வண்டிகள் பங்கு பெரும்.
ரேக்ளா ரேஸீக்கு தாய்வீடாக கருதப்படுவது தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடுதான். இங்குள்ள தம்புராட்டி அம்மன் கோயில் விழாவில் காளைகளை பூட்டி ரேக்ளா ரேஸ் வெகுசிறப்பாக நடைபெறும். இந்த நிலையில் கடந்த இரணடு ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேசுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மு்ன்தினம் மத்திய அரசு ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேசுக்கு அனுமதி அளித்தது. இதனால் வல்லநாடு கிராம மக்கள் உற்சாகம் அடைந்தனர். வேகமாக வண்டிகளுக்கு வர்ணம் பூச தொடங்கினர். தொடர்ந்து மாடுகளுக்கு கொம்புகளில் வர்ணம் பூசி, நெற்றியில் திலகமிட்டு தம்பூராட்டி அம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். அங்கு ரேக்ளா ரேஸ் வண்டிகளுக்கும், காளைகளுக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது.
தொடர்ந்து வண்டிகளில் காளைகளை பூட்டி வெள்ளொட்டம் பார்த்தனர். ஜல், ஜல் என காளைகள் சலங்கை ஓலியுடன் துள்ளி குதித்து வர அதை பார்த்த கிராம மக்கள் உற்சாகத்தில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications