அப்படியெல்லாம் பேசக் கூடாது, நாகரீகமாக பேச வேண்டும்.. அரசியல்வாதிகளுக்கு வானதி சீனிவாசன் அட்வைஸ்
கோவை: அரசியலில் இருப்போர் நாகரீகமாக பேசக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவை தொண்டாமுத்தூர் அருகே தான் தத்தெடுத்துள்ள உலியம்பாளையம் கிராமத்திற்கு வருகை தந்த அவர் அங்கு மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், அரசியலில் நாகரீகமான பேச்சு அவசியம். காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் கருத்து பெண்கள் அனைவருக்கும் அரசியலில் பின்னடைவை தந்துள்ளது.
பூரண மது விலக்கு பற்றி பேசும் ஒவ்வொருவரும், முதலில் தாங்கள் அதனை பின்பற்றுகிறோமா என்று சிந்திக்க வேண்டும்.
தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, மது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
இது நான் பிறந்து வளர்ந்த கிராமம். இந்த கிராம வளர்ச்சிக்காக பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்ய உள்ளேன். கிராமத்தில் உள்ள 300 குடும்பங்களுக்கு இன்சூரன்ஸ் எடுத்து கொடுத்துள்ளேன்.
இப்பகுதியில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பேன் என்றார் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications