ராகுல் காந்தி தகுதிநீக்கம்.. பாஜகவுக்கு எந்த சம்பந்தமுமில்லை.. கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன்
கோவை: ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதில் பாஜகவுக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது குஜராத் பாஜக தொடர்ந்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து ராகுல் காந்தி எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்தது.
இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தனது சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி நேற்று சூரத் நீதிமன்றம் சென்று மேல்முறையீடு செய்தார். அந்த மனு மீது வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி விசாரணை நடக்கிறது.

ஜாமீன்
இந்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் அவருக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது. ராகுல் காந்தி, அதானி குறித்து மக்களவையில் பேசக் கூடாது என்பதற்காக திட்டமிட்டே பழைய வழக்கை தோண்டி எடுத்து சிறை தண்டனை பெற வைத்து அவசர அவசரமாக தகுதி நீக்கமும் செய்யப்பட்டதாக பாஜக மீது கடும் விமர்சனங்களை காங்கிரஸ் முன் வைத்துள்ளது.

இந்தியாவில் ஜனநாயகம்
பாஜகவின் செயல்பாடால் இந்தியாவில் ஜனநாயகம் கேள்விக்குறியானதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கோவையில் தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் கோவை மாநகராட்சியை பொருத்தவரை பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்றம் உள்பட பல இடங்களில் கொடுத்து வருகிறோம்.

குடிநீர் பிரச்சினை
கோவையில் குடிநீர் பிரச்சினை என்பது பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில இடங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை 30 நாட்களுக்கு ஒரு முறை என குடிநீர் வருகிறது. சிறுவாணியில் நீர் குறைவாக இருந்தால் லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். கோடைக்காலம் தீவிரமாக தொடங்கும் முன்பே குடிநீர் பிரச்சினை மிகப் பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது.

மாநகராட்சி நிர்வாகம்
மாநகராட்சி நிர்வாகம் அண்ணா மார்க்கெட் பகுதியில் சுமை தூக்கும் பணியாளர்களுக்கு தகுந்த ஏற்பாடு செய்து தர வேண்டும். கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் மத்திய அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. மாநில அரசும் பொதுமக்களுக்கு தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காவிரி டெல்டா பகுதிகளை அதிமுக அரசு ஏற்கெனவே வேளாண் மண்டலங்களாக அறிவித்துள்ளது.

நிலக்கரி சுரங்கங்கள்
எனவே அந்த பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பது குறித்து மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும். ராகுல் காந்தி அவதூறு பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சட்டம் அதன் கடமையை செய்துள்ளது. இதற்கு தேவையில்லாமல் பாஜக மீது குற்றம்சாட்டுவது முறையானது அல்ல என வானதி தெரிவித்துள்ளார்.
-
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications