ஜெ. பெயர் சூட்டிய 6 புலிக்குட்டிகளையும் இனி நாமளும் பார்க்கலாம்.. டிவியில்

இது குறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வண்டலூர் பூங்காவில் 3 வெள்ளைப் புலிகள் உள்பட 6 புலிக் குட்டிகள் அண்மையில் புதிதாகப் பிறந்தன. இந்த புலிக் குட்டிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா _ தாரா, மீரா, பீமா, ஆதித்யா, கர்ணா, உத்ரா எனப் பெயரிட்டார்.
பிறந்து ஓரிரு மாதங்களே ஆனதால் புலிக் குட்டிகளை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வர இயலாது. தாய் புலிகளுடன் அவை தனித்து விடப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் புலிக்குட்டிகளின் இருப்பிடத்தில் பார்வையாளர்களை அனுமதித்ததால் தாய் புலி கோபமடையவும், அமைதியற்ற நிலையை அடையவும் வாய்ப்புள்ளது.
பொதுவாக புலிக்குட்டிகள் வளர்ச்சியடைந்து தற்காப்பு ஆற்றலை அடையவும், சக விலங்குகளை எதிர்கொள்ளவும் குறைந்தது ஒரு வருடமாகும். அதன் பிறகே திறந்தவெளி அடைப்பிடங்களில் புலிக் குட்டிகளை விட முடியும். ஆனால் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள், முதல்வர் பெயர் சூட்டிய புலிக்குட்டிகளை பார்க்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
அதைக் கருத்தில் கொண்டு புலிக் குட்டிகளின் அடைப்பிடங்களில் 4 சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் பதிவாகும் காட்சிகள் வெள்ளைப் புலிகளின் இருப்பிடங்களுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள 27 இன்ச் (அங்குலம்) கணினி திரையில் பொதுமக்கள் பார்வைக்கு நேரலையாக ஒளிபரப்பப்படும்.
இதன் மூலம் புலிக்குட்டிகளின் செயல்பாடுகள், தாய் புலியின் பண்புகள், உணவு முறைகள் ஆகியவற்றை பார்வையாளர்கள் தெரிந்து கொள்ள முடியும். தேசிய அளவில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதல் முறையாக இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications